இடம் பெற்றது. முழுக்காப்பியத்துக்கும் உரியதாக இந்த ஒப்பிலக்கிய ஆய்வுக் கட்டுரை இறுதியில் ஒரு தொகுதியில் இடம் பெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கதைக்குறிப்புகள் ஆங்காங்கே இடம் பெறின், பல கதைகள் திரும்பத் திரும்ப வரும் என்பதால், எல்லாவற்றையும் இறுதியில் ஒரே இடத்தில் தருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அடக்க விலைக்கே நாள்தோறும் அச்சுக்கூலியும் தாள் விலையும் எவரெஸ்டு உச்சியை நோக்கி இராம பாணம்போல் விரைந்து ஏறி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் கம்ப ராமாயண உரையைப் பரப்பும் நமக்கு உள்ள சிக்கலை நேயர்கள் புரிந்துகொள்ள முடியும். லாப நோக்கம்கருதாத திருப்பணி இது. எனவே, மிகவும் தாராள மனத்துடன் கம்பன் அறநெறிச் செம்மல் திரு. ஜி. கே. சுந்தரம் அவர்கள் அடக்கவிலைக்கே வெளியிட வேண்டும் என முடிவு செய்தார்கள். ஆகையால், முதலில்முன் பதிவு செய்த நேயர்களுக்கு முன் தந்த சலுகையைத் தொடர்ந்து தர முடியவில்லை என்பது குறித்து வருந்துகிறோம். புத்தகச் சந்தையிலேகுறிக்கப்படும் விலையை இந்தப் பதிப்பின் விலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், கம்பன் டிரஸ்ட் செய்துள்ள இந்த முடிவின் சிறப்பு எளிதாக விளங்கும். நன்றி இந்த ஆக்கத் திருப்பணியில்ஈர்த்துவிட்டு வழிநடத்திவரும் அலகிலா விளையாட்டுடைய தலைவர்க்கு முதலில் நன்றி செலுத்த வேண்டும். 'அலகிலா விளையாட்டு உடையார்' என்பதை இம் முயற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் உணர முடிந்தது என்பது உண்மை; வெறுஞ் சொல் அலங்காரம் அன்று. 'உன் அடைக்கலம் கண்டாய்' என்று மீண்டும் பேரருளாளனிடத்தே சரண் புகுவதன்றி வேறு செயல் இல்லை. |