14

     பொருள் ஊட்டம்உதவும் வள்ளல்கள், இயற்றுதற் கருத்தாக்களாகிய
உரையாசிரியர்கள், அவர்களை நெறிப்படுத்தி உருக் கொடுக்கும் பதிப்பாசிரியர்,
அவர்க்குத் துணை நிற்போர் யாவர்க்கும் நன்றி.

     அச்சுப் பணியினைஏற்று மிகு விரைவில் நன்கு உருவாக்கிய
வர்த்தமானன் அச்சகத்தார் சிறப்பாக எம் நன்றிக்கு உரியவர்,

     ஊர் கூடி இழுத்த தேர்,தமி்ழ் நெஞ்சங்களின் நினைவு வீதியிலே உலா
வருகிறது. தெய்வ மாக் கவி தரிசனம் பெற்று, அலகிலா விளையாட்டுடைய
ஆதிமூர்த்தியின் அருளைப் பெற்றிடத் தமிழறிந்தோர் யாவரையும் 'சேர
வாரும்' எனக் கரம் கூப்பி வரவேற்று வணங்குகிறோம்.

                                          ம. ரா. போ. குருசாமி
                                        ஒருங்கிணைப்பாளர்