9

     உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
     நிலைபெறுத்தலும்நீக்கலும் நீங்கலா
     அலகு இலா விளையாட்டுஉடையார் - அவர்
     தலைவர் அன்னவர்க்கேசரண் நாங்களே

ஒரு திருப்பயணம்

இன்னும் பாதி

     இறைவன் திருவருளாலும்புரவலர்கள் கொடையாலும் சான்றோர்
வாழ்த்தாலும் புலமையாளர் ஒத்துழைப்பாலும் கம்ப ராமாயண விளக்க
உரைப்பணி செவ்வனே தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

     கம்ப ராமாயணத்தின்ஐந்தாவது காண்டம் - சுந்தர காண்டம் இப்போது
உரையுடன் வெளிவருகிறது. இன்னும் யுத்த காண்டம் வெளிவர வேண்டும்;
பணி நடைபெறுகிறது. விரைவில் இத் திருப்பணி நிறைவெய்திடும் என்ற
நம்பிக்கை இருக்கிறது. இறைவன் திருவருள் வலத்தால் மங்களமாக இத்
தெய்வப் பணி நிறைவெய்தும்.

     கம்ப ராமாயணத்தில்ஏறத்தாழப் பாதியாக அமைவது யுத்த காண்டம்;
அதாவது, வெளியீட்டுப் பணியில் இன்னும் பாதி இருக்கிறது. தமிழ்ப்
பெருமக்களின் நல்லாதரவினை நம்பியே கோவைக் கம்பன் அறநிலை இந்தப்
பணியை மேற்கொண்டது.

தொடக்கமும் தொடர்ச்சியும்

     கோவையில் இயங்கிவரும்மங்கள வாரக் குழு குன்னூரில் எண்ணிய
எண்ணம், செந்தமிழருட் செம்மல் டாக்டர் பி. எஸ். ஜி. ஜி. கோவிந்தசாமி
அவர்களின் முயற்சி, அம் முயற்சி தடைப்பட்டுவிடுமோ என்ற கவலை
ஏற்பட்டபோது தம் தோளில் பாரத்தை உவகையுடன் ஏற்றுக்கொண்ட கம்பன்
அறநெறிச் செம்மல் திருமிகு ஜி. கே. சுந்தரம் அவர்களின்