21   யுத்த காண்டம்

அவனுக்கு வேண்டியப்   பணிகள் செய்ய நால்வர் முதல் அறுவர்
வரை தேவைப்பட்டனர். படைவீரர்களை விட, பணியாளர் தொகை
அதிகமாக   இருந்தது.  மராட்டியப் படைகளைப் பொறுத்தமட்டில்
ஒவ்வொரு வீரனும் அன்றாடம் தனக்கு வேண்டிய உணவைத் தன்
முதுகிலேயே கட்டித் தொங்கவிட்டிருந்தான். இதனால் மொகலாயப்
படையின்      எண்ணிக்கையும்,     தளவாடங்களும்  அதிகமாக
இருந்தமையின்    அப்படைகள்    நகர்வது  மிக    மெள்ளவே
நடைபெற்றது.     மெள்ள    நகரும் அவர்களை மிக வேகமாகச்
செல்லும் வாய்ப்புகள் பெற்ற மாராட்டியர் எளிதாகச் சாடமுடிந்தது.
 

படைகளின் எண்ணிக்கையைத் தருவதன் மூலம், குரங்குப் படை
எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், ஓரிடத்திலிருந்து மற்றோர்
இடத்திற்கு மிக விரைவாகச் செல்லும்  வாய்ப்பைப் பெற்றிருக்கிறது
என்பதைக் கவிஞன் கூறுகிறான். உணவு வழங்கல்பற்றி இக் கவிஞன்
பேசும்பொழுது எவ்வளவு   நுண்மையாகப்     போர்  முறைபற்றி
அறிந்திருக்கிறான் என நாம்   அறியமுடிகிறது.   அன்றும் இன்றும்
போர் என்று வந்தால்  ஒற்றர்கள்   மிக இன்றியமையாத உறுப்பாக
அமைவர். இங்கும்   இராவணன் படைபலம்பற்றிய நுணுக்கங்களை
இராமனுக்குக்     கூற  வீடணன்    பயன்படுகிறான்.    இராமன்
இலங்கைக்குள் வந்து  இறங்கியதிலிருந்து, ஒவ்வொரு வாயிலுக்கும்
படைகளைப்   பிரித்து    அனுப்புவதுவரை    அவன் செயல்கள்
ஒவ்வொன்றையும்   ஒற்றர்கள்    மூலம்  அறிகிறான் இராவணன்.
இதிலும் கம்பன்  கற்றுத் துறைபோகியவன் என்பதை அறியலாம்.
 

இதன்பிறகு    மாவீரர்கள் போருக்கு புறப்படுமுன் வீரக்கழல்
அணிவதிலிருந்து, கவசம் அணிவது வரை விரிவாகக் கூறியுள்ளான்
(7126, 9649, 7113, 9645).     இதனை    அடுத்து    வாள், குடை
முதலியவற்றிற்குப்    பூசனை    புரிதல்   நல்நிமித்தம் பார்த்தல்
ஆகியனவும் பேசப்பெறுகின்றன.
 

இத்துணை நிகழ்ந்தும் இராம, இலக்குவர்களின் வன்மைபற்றி
இராவணன் குறைந்தே மதிப்பிட்டிருந்தான்  என்பதைக் கவிஞன்
காட்டிக்கொண்டே செல்கிறான். இவ்வாறு அவன் கருத இரண்டு
காரணங்கள்      இருந்தன.   முதலாவது காரணம் இராவணன்
தன்மேலும்,  தன்    பராக்கிரமத்தின்   மேலும்,   தான் பெற்ற
வரங்களின்மேலும்