26   யுத்த காண்டம்

மகாராஷ்டிரம் வழியாகப் பிருந்தாவனம் சென்றன என்பதை
அறியமுடியும். (பாகவத புராணம் அத்தியாயம் 1, பாடல் 48)
நாயன்மார்கள்,    ஆழ்வார்கள்    காலத்திற்கு  முன்னரே
தமிழகத்தில் புகுந்து ஓரளவிற்கு வளர்ச்சியும்  பெற்றுவிட்ட
புத்தம், சமணம் ஆகிய இரு பெருஞ்சமயங்களும் காலூன்றி
நின்றன.    இவற்றை அடுத்து 8ம் நூற்றாண்டில் தோன்றிய
ஆதி    சங்கர    பகவத்பாதர் அத்வைதக் கொள்கையை
இந்தியா   முழுவதும்     பரப்ப முயன்றார். இந்த மூன்றும்
அறிவு வாதத்தை  அடிப்படையாகக்    கொண்டவை. புத்த
சமயம்,   தர்க்கத்தை    அடிப்படையாகக்      கொண்டு
வளர்ந்ததாகும். அதனைப் பெரிதும்   எதிர்த்த   சங்கரரும்
அறிவு     வாதத்தையே     அடிப்படையாகக்   கொண்டு
அத்வைதத்தை      நிலைநாட்ட   முயன்றார். தமிழகத்தில்
தோன்றிய     நாயன்மார்கள்,   ஆழ்வார்கள் தோற்றுவித்த
பக்தி     இயக்கம்    ஓரளவு    சமண     சமயத்தையும்,
பெரிய அளவில்   புத்த   சமயத்தையும் அமிழ்த்திவிட்டது.
மூளையின்     தொழிலாக    உள்ள    அறிவு வாதத்தால்,
அறிவாளிகளைத்     தவிர ஏனையோரை   ஒருங்கிணைக்க
முடியாது     என்பதனை நன்குணர்ந்த தமிழர்,  உணர்வின்
அடிப்படையில்      தோன்றும்   பக்தி    இயக்கத்திற்குத்
தலைமையிடம் தந்தனர்.
  

இந்த    நிலையில்தான் ஆதிசங்கரர் தோன்றி,  பிரம்ம
சூத்திரத்திற்கும், கீதைக்கும், பல உபநிடதங்களுக்கும்  சீரிய
முறையில் அத்வைதக்  கொள்கையின் அடிப்படையில் உரை
அமைத்தார்.    இதுவும்  அறிவின் அடிப்படையில் எழுந்த
ஒன்றே   ஆகும்.  அறிவுத் தெளிவின் முடிந்த எல்லையாக
இருப்பவை  உபநிடதங்க ளாகும்.    என்றாலும்,     இந்த
உபநிடதங்களை  விரித்துப்    பொருள் காண்பதில் கருத்து
வேறுபாடுகள்     இருந்தன.   என்றாலும்,   சங்கரருடைய
அத்வைதக் கொள்கை, தமிழகத்தில்   சண்டமாருதம்போல்
புகத்      தொடங்கிற்று.  சங்கரர்   காலத்திலேயே   இச்
சண்டமாருதம்      தொடங்கிவிட்டதால்     தமிழகத்தின்
இயல்பானதும்,      பழமையானதுமான   பக்தி  இயக்கம்
ஒளிமங்கலாயிற்று.
 

இந்த  நிலையில்தான், கம்பநாடன் காப்பியம்  இயற்றத்
தொடங்குகிறான்.    தேவாரம்,     திவ்வியப்   பிரபந்தம்,
உபநிடதங்கள்   என்பவற்றில் துளையமாடியவன்   கம்பன்,
பிரபந்தங்கள்    வளர்த்த    பக்தி நெறிக்கு இடம் தராமல்,
இறைவன்,   உயிர்கள்,    உலகம்   என்ற     மூன்றையும்
வேறுபடுத்திக்