பாண்டியப் பேரரசும் நிலை குலைந்துவிட்ட காலம். அந்நிலையில், சோழர்கள் தம் நாட்டைப் பெரிதாக்கி நிலையான ஒரு பேரரசை நிறுவ வேண்டும் என்று கம்பன் நினைக்கிறான். வடபுறத்தில் கீழை, மேலைச் சாளுக்கியர்கள் ஆதிக்கம் இருந்துவருகின்ற காலம். காஞ்சியில் தொடங்கி கன்னியாகுமரிவரையில் வலுவான அரசாட்சி எதுவும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சோழர்கள் போர் செய்துதான் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்ப வேண்டும் என்பதைக் கம்பன் உணருகிறான். போர் ஒன்றுதான் வழி என்ற முடிவுக்கு வந்தவுடன் சோழர்கள் எவ்வாறு போரை மேற்கொள்ள வேண்டும் என்பதை விரிவாகச் சொல்ல விரும்புகிறான். | இந்த நிலையில் பழைய புறநானுாற்றுப் பாடல் ஒன்று கம்பன் மனத்தில் நிழலாடுகின்றது. அக்காலத்தில் யானை, குதிரை, தேர், காலாள் என்று அரசனுடைய படைகள் நால்வகையாகப் பிரிந்து நின்றன. இந்த நால்வகைப் படையும், யாரிடம் அளவாலும், தரத்தாலும் மிகுந்துள்ளதோ அவர்களே வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க முடியும் என்று பலரும் நம்பினர். இன்னும் சொல்லப்போனால் கருவிகள், எந்திரங்கள் முதலிய படைக்கருவிகளை அதிகம் பெற்றவர்களே வெற்றி எய்துவர் என்று இன்றும் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையில் மிகப் பெரிய ஓட்டை இருப்பதை அன்றும், இன்றும் பலரும் அறிந்திருக்கவில்லை: இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு தோன்றிய நம் முன்னோர் இதனை நன்கு அறிந்திருந்தனர் என்பதனைப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் வரிகள் நன்கு விளக்கும். | "கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும் நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும் என நான்குடன் மாண்டது ஆயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" | (புறம்-55) | இப்பாடலின்படி, ஒப்பற்ற யானைப்படையும், விரைவில் பாய்கின்ற குதிரைப் படையும், நெடிய கொடி கட்டப்பட்ட தேர்ப்படையும், வைரம் பாய்ந்த நெஞ்சுடைய காலாட்படையும் என்ற நால்வகைப் படையுடன் உன் ஆட்சி, மாட்சிமை பெற்றிருந்தாலும் (மாண்டது ஆயினும்) நீ பெறும் வெற்றி இவற்றால் அன்று (பின்னர் எது எனில்) |
|
|
|