16   யுத்த காண்டம்

யுத்த    காண்டத்தில்     கடல்    காண் படலம் முதல், விடை
கொடுத்த  படலம்  ஈறாக, 39 படலங்கள்    உள்ளன.    முடிசூட்டு
படலம்,   விடைகொடுத்த    படலம்   போக எஞ்சிய 37ம் போரும்,
போர்த் தொடர்புடைய செய்திகளும் கொண்டவை ஆகும்.  இவற்றுள்
மகுட பங்கப் படலத்திலேயே போர்  தொடங்கிவிட்டது    என்பதை
அறியமுடிகிறது. மகுட   பங்கத்திற்கும்,   முதற்போருக்கும் இடையே
அங்கதன் தூதுப்  படலத்தை வைப்பதன் மூலம் அறப்போர் என்றால்
என்ன என்பதைக் காட்டுகிறான் கவிஞன்.
 

ஒரு    வகையில்    நோக்குமிடத்துப் போர் தொடங்கி விட்டது
என்றாலும்,    அங்கதனைத் தூது அனுப்ப வேண்டும் என்று இராமன்
சொன்னபொழுது வலுவான காரணங்கள் பலவற்றைக் காட்டி,அச்செயல்
கூடாது என இலக்குவன் மறுக்கிறான். சிறந்தது   போரே    என்றான்
இலக்குவன்; சேவகன் முறுவல் செய்து விடை கூறுகிறான்:
 

"அயர்திதிலென்; முடிவும் அஃதே; ஆயினும், அறிஞர் ஆய்ந்த
நயத்துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ?
புயத்துறை வலியரேனும், பொறையொடும் பொருந்தி வாழ்தல்
சயத்துறை; அறனும் அஃதே' என்று இவை சமையச் சொன்னான்" 

(6981)

எந்த     நிலையிலும்,   மனைவியை இழந்த நிலையிலும் கூட -
இழப்பித்தவனைத்     தண்டிக்க   வந்த நிலையிலும் கூட அறநெறி
பிறழாதவன் இராகவன் என்பதைக் காட்டுகிறான், கம்பன். வருங்காலச்
சமுதாயத்திற்கும், வளர்ந்து வரும் சோழப்   பேரரசிற்கும்  அறவுரை
கூறவந்த கம்பன் வாய்ப்புக்   கிடைக்கும்தோறும், 'அறநெறி முதற்றே
அரசின் கொற்றம்' (புறம் - 55) என்பதை நினைவூட்டத் தவறவில்லை.
 

கரன், கும்பகர்ணன், படைத்தலைவர், அதிகாயன், இந்திர சித்தன்,
மகரக் கண்ணன், இராவணன் ஆகிய இவ்வனைவரும்  தனித்தனியே
இராமனுடன்     போர்      செய்தனர். இந்தப்   போர்களில், ஒரு
போரைப்போல மற்றொரு போர் நிகழ்ந்ததாகக் கவிஞன் பாடவில்லை.
அதிலும் ஒரு வியப்பு என்னவென்றால், எதிரிகள் தாம் தனித்தனியாக
வந்து போரிட்டனரே தவிர, அனைத்துப் போரிலும் இப்பக்கத்தில்