தொகுப்புரை வான்மீகத்தில் கைகேயி இராமனுக்கு அரசன் கட்டளையைக் கூறும்போது தசரதன், சுமந்திரன்இலக்குவன் முதலானவர்களும் குழுமியிருக்கின்றனர். தசரதன் உணர்விழந்த நிலையில் இருப்பதை இராமன் கண்டு வருந்துகிறான். கைகேயியை மறுத்துக் கூறும் நெஞ்சுரம் இல்லாதவனாகத் தசரதன் மயங்கிக் கிடத்தலையும்இராமன் காணவும் கலங்கவும் நேர்கிறது. கைகேயி கட்டளையைச் சிரமேற் கொண்டு இலக்குவனுடனும்சீதையுடனும் தேரில் புறப்படுவதைத் தசரதன் கண்டுகையற்று வருந்துகிறான். தேரை ஓட்டச் சுமந்திரன்முற்படுகையில் தசரதன் அவனை ‘நில்’ எனக் கூற, இராமன் ‘செல்’ என்று கூறுவதாக வால்மீகி காட்டுகிறார். அத்யாத்மமும், ரங்கநாத, பாஸ்கர, கன்னச, துளசி, எழுத்தச்சன் இராமாயணங்களும் பெரும்பாலும் வான்மீகத்தைஓட்டிச் செல்கின்றன. மொல்லராமாயணத்தில் சுமந்திரனே கைகேயியின் கட்டளையை இராமனுக்குக் கூற இராமன்தசரதனைப் பார்க்காமலேயே காடு செல்லப் புறப்படுகிறான். அத்யாத்ம ராமாயணத்திலும் தொரவெ ராமாயணத்திலும் தசரதன் இராமனைப் பார்த்துப் பேசுமிடத்துத் தன் கையற்ற நிலையைப் புலப்படுத்தும் அவலக்காட்சி இடம்பெறுகிறது. தசரத ஜாதகம், வாசுதேவ ஹிண்டி, திபேத்திய ராமாயாணம், மலேசிய ராமாயணம் ஆகியனவற்றில்தசரதனே இராமனுக்குக் காடு செல்லக் கட்டளையிடுகிறான். மேற்கண்ட இந்துமதம் சாராத இராமாயண நூல்களில் இராமனுக்குப் பன்னிரண்டாண்டுகள் காடுறை வாழ்க்கை விதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய ஹொபுட்சுஷூ என்னும் ஜப்பானிய ராமாயணம் இராமன் வனவாசம் சென்ற மைக்குப் புதுக்காரணத்தைக் கூறுகிறது. இதில் வரங்கள் பற்றியகுறிப்பே இல்லை. தசரதனோ கைகேயியோ ஆணையிடவில்லை; இராமனே கொல்லாமை நோன்பு காக்கத்தன் மனைவியுடன் காடு செல்கிறான். இந்தியாவிலிருந்து பௌத்த அறிஞர்களின் மூலமாகக் குடிபெயர்ந்தஇராமகாதை ஜப்பான் நாட்டுப் பண்பாட்டிற்கேற்ப இம்மாற்றத்தை அடைந்துள்ளது போலும். பெரும்பாலும் வான்மீகத்தை ஓட்டிச்செல்லும் கம்பன் கைகேயி இராமனுக்குக் கட்டளையிடும்சூழலைப் பெரிதும் மாற்றிப் படைத்திருக்கக் காண்கிறோம். இங்கே இராமன் தனியாக அரண்மனைக்குவருகிறான். இலக்குவன் உடன் செல்லவில்லை. அவன் |