உள்ளே வந்து தசரதன் முதலியோர் உறையும் பகுதிக்கு வரும் முன்னரே கைகேயி முந்திச் சென்றுஅவனைச் சந்திக்கிறாள். கைகேயி இராமன் இருவரிடை மட்டுமே உரையாடல் நடைபெறுகிறது. தசரதனின்கையற்ற அவலநிலையை இராமன் அறியாத நிலையிலே அவன் கட்டளையாகக் கைகேயி கூறுவதைக் கேட்டுத்தசரதனைக் காணாமலே திரும்புகிறான். மின்னொளிர் கானம்இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் என்று கூறியவன் மீண்டும் கைகேயியையோ தசரதனையோ சந்திக்காமலே காடுசெல்வதாகக்கம்பன் படைத்துக் காட்டுகிறான். ஏறக்குறைய வான்மீகியின் இருபது சருக்கங்களைக் கம்பன் ஒன்பதுபாடல்களாகக் சுருக்கி அமைத்து விடுகிறான். வான்மீகியின் காப்பியம் ஆதிகாவியமாக (primaryepic) அமைய, கம்பனின் காப்பியம் கலைக் காப்பியமாக (secondany or scholar epic) அமைந்துள்ளமையைக் காட்டும் பகுதிகளில் இச்சுருக்கம் மிக இன்றியமையாத இடத்தைவகிக்கிறது. கம்பனுக்குப்பின்னர்த் தோன்றிய இந்திய இராமாயணங்கள் இக் கலைமுதிர்ச்சியைக் கையாண்டுள்ளதாகத் தெரியவில்லை. இக் சுருக்கத்தால் காப்பியக் கட்டுக்கோப்பு செறிவடைந்து முருகியலின்பம் சிறந்து நிற்பதுஒருபுறமிருக்க, இராமனது மனஉறுதி, கைகேயி மாட்டுள்ள நம்பிக்கை, அறச்சிக்கலால் தசரதனுக்குஉண்டாகும் மன உளைச்சலைத் தவிர்க்க விரும்பிய அருளுள்ளம் போன்ற இராமனின் பல்வேறு ஆளுமைக்கூறுகள் வெளிப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதைக் காணலாம். கூர்தலறப் பான்மையால் வழிநூல்கள்இத்தகைய கலைமுதிர்ச்சியடைந்து முதனூலினும் சிறந்து நிற்றல் இலக்கிய உலகில் இயற்கையே யாயினும்,இந்தியக் காப்பியங்களில் கம்பனுக்கு முன்பும் பின்பும் இத்தகைய முதிர்ச்சி காணப்படாமையின், இதனைக் கம்பனின் தனிச் சிறப்பாகவே கொள்ளக்கிடப்பதை அறிஞர்கள் எளிதின் உணரலாம். இனி இராமனின் கூற்றாலும் செய்கையாலும், வெளிப்படும் அவனது பண்புச் சிறப்புகளைக் கவிஞர்கள்கவிக்கூற்றாகக் கூறும் இடங்களும் ஆய்வுக்குரியவைகளாய் அமைகின்றன. கைகேயியின் கட்டளையைக்கேட்ட இராமனின் மனநிலையைப் பெரும்பாலும் எல்லாக் கவிஞர்களும் வெளிப்படுத்த முயன்றுள்ளனரேனும்,வால்மீகி, கம்பர், துளசி என்னும் முப்பெருங் கவிஞர்களும் இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள் எனலாம். பரதன் முடிசூடத் தான் காடேக வேண்டும் என்னும் கைகேயியின் வரத்தை அரசன் கட்டளையாகக்கருதிய இராமன் மனம் வருந்தவில்லை என்று காட்டுகிறார் வால்மீகி. சரத்காலச் சந்திரன்போன்று தன் இயற்கையான மனமகிழ்ச்சியையும் முகமலர்ச்சியை |