யும் இராமன் எந்தச் சூழ்நிலையிலும் இழக்கவில்லை என்று நகர மக்கள் கண்டு கூறுவதாகவும் கவிஞர்கூறுகிறார். எனவே, இராமனின் ‘சமநிலை’ப் பண்பைக் (equanimity) கவிஞர் உறுதிப்படுத்துகிறார்என அறிகிறோம். இனி, அரண்மனையிலிருந்து திரும்பி வந்த இராமனின் முகம் ஒளி குறைந்து வாட்டமுற்றும் மேனிவியர்வையால் நனைந்தும் இருப்பதைக் கண்ட சீதை துணுக்குற்றாள் என்றும், தமசா நதிக்கரையில், இராமன் இலக்குவனுடன் பேசுமிடத்துக் கைகேயியின் மீது வருத்தமுற்றான் என்றும் வால்மீகிகூறுவதைக் கொண்டு அரசிழப்பால் இராமன் வருந்தினான் என்று சிலர் கருதுகின்றனர். தன் மாளிகை நோக்கி வரும் இராமன் சிந்தனையில் மூழ்கிய வனாய்க் காணப்படுதல் உண்மைதான்.ஒளி குன்றிய முகமுடையவனாய் இருப்பதும் உண்மையே. ஆனால், இம் மாறுதல்களுக்குக் காரணம் அரசிழப்புஎன்று கொள்வதைவிடச் சீதையை எவ்வாறு சமாதானப்படுத்துவது, அவளைப் பிரிந்து எவ்வாறு பதினான்குஆண்டுகள் வாழ்வது, அல்லது அவளையும் அழைத்துச் செல்வதால் என்னென்ன இடையூறுகள் தோன்றும் என்றெல்லாம் சிந்தித்தவாறே வருதலின் தன்னலமற்ற சிந்தையின் வெளிப்பாடாக முகமலர்ச்சி குன்றியது எனக்கொள்ளுதல் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. எனினும் தமசா நதிக்கரையில் தங்கிய முதல் இரவன்று கைகேயியின் அன்பின்மை குறித்து இராமன் இலக்குவனிடம் கூறும் சொற்களில் தந்தையின் மரணம், பரதன் ஒருவனே அரசனாதல், தான்வனமேகல் என்னும் மூன்று செய்திகளுக்காகவும் இராமன் வெளிப்படையாக வருந்துவதைக் காண்கிறோம். கைகேயியின் அன்பு குறித்தும், விதியின் வலிமை குறித்தும் விளக்கமாக இலக்குவனிடம் பேசிய இராமன்இங்கே இவ்வாறு அவளைநிந்திக்குமாறு வான்மீகத்தில் படைக்கப்பட்டிருப்பது ஏன் என்று விளங்கவில்லை. கம்பராமன் கைகேயியை ஐயுற்றுக் கூறுவதாக எங்கும் செய்திஇல்லை. இராமனின் முகவாட்டத்தைச்சீதை கண்டு வருந்தினாள் என்ற குறிப்பும் கம்பனில் இல்லை. கைகேயியின் கட்டளையைக் கேட்டஇராமனின் முகம் சஞ்சலமின்றி இருந்ததாகவும், இயல்பான முகமலர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒரு சிறிதும் மாறவில்லை என்றும் வான்மீகி கூறுகிறார். கைகேயியின் ஆணையைக் கேட்டதும் இராமன் அடைந்த மகிழ்ச்சியைக் கம்பன் வருணிக்கும் பாடல்வாசகர்கள் அனை |