இனிக் கோசலையையும் இலக்குவனையும் சமாதானப்படுத்து மிடத்தும் இராமனுடைய சமநிலைப் பண்புவெளிப்படுவதைக் காணலாம். "காட்டிற்குப் போகவேண்டாம், என் ஆணையை விடச் சக்களத்தியின்ஆணைக்கு அடங்கி நடக்க நீ ஏன் விருப்பப்படுகிறாய்" என்று கேட்ட கோசலையை நோக்கித் "தந்தையாரின்ஆணையைப் புறக்கணிக்கும் அதிகாரம் எனக்குக் கிடையாது. நான் காட்டிற்குப் போகத் தயாராகிவிட்டேன். தாங்கள் என்னை வாழ்த்தி விடை கொடுங்கள்" (ii. 21 - 31) என்று வான்மீக இராமன் கூறுகிறான். உனக்குரிய அரசைப் பறித்த கைகேயியையும் அதற்கு உடந்தையாயிருந்த தசரதன் முதலானவர்களையும்உடனே கொன்று உனக்குப் பட்டாபிசேகம் செய்து வைக்கிறேன் என்று சீறி நின்ற இலக்குவனுக்குப் பலவகையாகச் சமாதானம் கூறுகிறான் இராமன். இலக்குவ, உனது பராக்கிரமம் யாவரும் நன்கறிந்ததே. மூவுலகையும் ஒருங்கு வெல்ல வல்லவன்நீ என்பதை நான் நன்கறிவேன். அறங்களுட் சிறந்தது சொன்ன சொல் தவறாமையாகிய வாய்மையே.இதைக் காப்பாற்ற விரும்பும் தந்தையின் ஆணையை மீறலாமா? தந்தையாரின் உத்திரவினால்தான் கைகேயிஆணையிட்டாள். இதில் அவளுடைய குற்றம் என்ன இருக்கிறது? ஆகையால், அறத்திற்கு எதிராகப் பராகிரமத்தைப் பயன்படுத்தக் கருதும் எண்ணத்தைத் தவிர்ப்பாயாக. அறமே தலையாயது, வீரமன்று என்று உணர்வாயாக(ii.21. 40 - 45) இப்பொழுது நமக்கேற்பட்டிருக்கும் நிலை விதியால் விளைந்தது. இன்றேல் எனக்கு இடையூறுவிளைவிக்கக் கைகேயி கருதுவானேன்? இதற்கு முன்னர்ப் பரதனுக்கும் எனக்கும் இடையில் அவள் அன்பில் வேறுபாடு கண்டதுண்டா? இயற்கையாகவே நற்குண நற்செய்கைகளை உடையவளாய், யாவராலும் கொண்டாடத்தக்க உத்தம குணங்களை உடையவளாய் இருந்த கைகேயி, தன்னியல்பினின்றும் முற்றிலும் மாறுபட்டவளாய்க்கல்வியறிவற்ற ஒரு சாதாரணப் பெண்ணைப் போலாகித் தன் கணவன் முன்னிலையில் என்னைப் பாதிக்கும்வகையில் பேசியது என்ன காரணத்தால் என்று எண்ணுகிறாய்? (ii.22. 16 - 20) எந்த ஒரு இன்பத்திற்கோ துன்பத்திற்கோ, வியாதிக்கோ, கோபத்திற்கோ, லாபத்திற்கோ, நஷ்டத்திற்கோ, பிறப்பிற்கோ, இறப்பிற்கோ காரணம் இன்னதெனக் கொஞ்சமும் அறிய முடியவில்லையோஅதுதான் இறைவனின் திருவுளப்பயன். தொடங்கப் பெற்ற ஒரு செயல் தடையுற்றுச் சற்றும் எதிர்பாராதஒரு செயல் தன்னியல்பில் நிகழுமாயின் அது தெய்வத்தின் செயலன்றி வேறில்லை. எனவே, பட்டாபிடேகம் தடைப்பட்டதற்குக் கைகேயி |