வில்லை என்பதைக் காட்டுவதே இங்கு இவ் இரு மகா கவிஞர்களின் நோக்கம் என்பது தெள்ளிதின்புலனாகக் காணலாம். 2.3. சீதையும் இலக்குவனும் இராமனுடன் காடுசெல்லல் தந்தையின் கட்டளைப்படி காடு செல்லத் துணிந்த இராமனைத் தங்களையும் அழைத்துச் செல்லுமாறுசீதையும் இலக்குவனும் வற்புறுத்துகின்றனர். இந்நிலையில் அவர்கள் இராமனுடன் விவாதிக்கும் கருத்துக்கள் இராமாயணத்தோறும் வேறுபடுவதால் அவை சிந்தனைக்கு விருந்தாகின்றன. சில முக்கியமானவேறுபாடுகளைக் கீழே காணலாம். 2.3.1. சீதை இராமனுடன் செல்லத் துணிதல் வான்மீகம் தன் தாய் கோசலையிடம் விடைபெற்றுக் கொண்ட இராமன் நேராகச் சீதையிடம் வந்து, "சனகனின் திருமகளே, கைகேயின் வேண்டுகோளுக்கு இணங்க என் தந்தையார் பரதனுக்குஇளவரசுப் பட்டம் கட்டவும், நான் பதினான்கு ஆண்டுகள் தண்டகாரண்யத்தில் வாழவும் கட்டளையிட்டிருக்கிறார். அதன்படி நான் இப்போது காட்டிற்குப் புறப்படுகிறேன். நீ நல்லறங்களைப் பின்பற்றி என் பெற்றோருக்குஉரிய தொண்டுகளைச் செய்துகொண்டிரு. பரதன் அரசனானதும் அவனுக்குப் பணிந்து நட. என்னுடையபெருமைகளைப் பற்றிஅவனிடம் புகழ்ந்து பேசாதே . அரசர்கள் இதனை விரும்பார். அவன் கோபப்படுமாறுநடந்துகொள்ளாதே" என்று கூறுகிறான் (சருக்கம் 26). இதனைக் கேட்டு மனம் வருந்திய சீதை இராமனைநோக்கி, "புருடோத்தம, மகளிர்க்குக் கணவன்தான் இம்மையிலும் மறுமையிலும் எக்காலத்திலும் துணை.தந்தை, மகன், தாய், தோழியர் போன்றோர் துணையாகார். தங்களுடன் நான் இப்போதே காட்டிற்குவருவேன். நான் என் தந்தையார் அரண்மனையில் வாழ்ந்தபோது, "காட்டில் சில காலம் வாழ வேண்டியகிரக அமைப்பு உனக்கு உண்டென்று." சோதிட வல்லுநர்கள் கூறியதிலிருந்தே வனவாசத்தில் எனக்குப்பெருவிருப்பு உண்டாயிற்று. இப்பிறவியில் கணவனாகப் பெற்றவனையே பரலோகத்திலும் |