108

கணவனாகப் பெறுவாள் என்று வேதம் கூறுவதாகப் புகழ்பெற்றவைதிகப்
பிராமணர்கள்கூறுகிறார்கள். அப்படியிருக்க என்னைத் தங்களுடன்
அழைத்துப் போக விரும்பாமைக்குக் காரணமென்ன? இப்படி உள்ளம் உருகி
வேண்டிக்கொள்ளும் என்னைத் தாங்கள் அழைத்துப்போகவில்லை என்றால்,
நான் இப்போதே நஞ்சுண்டு சாவேன். நஞ்சும் வேண்டாம்,  பிரிந்த உடனே
மனவேதனையால் இறந்து படுவேன்"  என்று கூறிக் கண்ணீர் சொரிந்து
நின்றாள். (சருக். 27 - 30)

     இவ்வாறு சீதை நொந்து கூறியதைக் கேட்ட இராமன், "என்நிழல்
போன்றவளே,  உன் உள்ளக்கருத்தையும், மன உறுதியையும் அறிந்து
கொள்வதற்காகவே நான் இதுவரை  மறுத்து வந்தேன்.  என்னுடன்காட்டில்
வாழ்வதற்காகவே படைக்கப்பட்டவள் நீ. ஆகையால், என்னைத் தொடர்ந்து
காட்டிற்குவந்து நான் இயற்றும் அறங்களுக்குத் துணை செய்வாயாக" என்று
கூறி மகிழ்வித்தான். (சருக். 30)

கம்ப ராமாயணம்

     "பரதன் நாடாள்வான்.  நான் வனம் செல்ல ஆணை பெற்றுள்ளேன்; 
மீண்டு வரும்  வரை  வருந்தாதிரு"எனக் கம்ப இராமன் கூறக் கேட்ட
சீதையின் துயர நிலையை

    நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்
    மேயமண் இழந்தான் என்றும் விம்மலள்
    நீ வருந்தலை நீங்குவென் யான் என்ற
    தீய வெஞ்சொல் செவிசுடத் தேம்புவாள்.
           (ii. 4.218)

    என்னை என்னை இருத்தி என்றான் எனா
    உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள்.
                 (219)

என்று கவிஞன் பாடுகிறான். "அரக்கை உருக்கி ஊற்றினாற் போன்ற கொடிய
வெம்மையுடைய காட்டில்நடக்கும் தன்மையதோ நின் மெல்லடி"  என்று
இராமன் கூற  ‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு’ என்று சீதை வேக
மறுமொழி கூறி வெதும்பினாள். சீதையின் சொற்களையும் அவற்றின்
உட்பொருளையும்உணர்ந்த இராமன் கண்களில் நீர் ததும்பியவனாய் ‘இனி
என்ன செய்வது?’ என்று சிந்திக்கலானான். அதற்குள் விரைந்து அரண்மனை
சென்ற சீதை மரவுரியை உடுத்திக் கொண்டு இராமன் பக்கம் வந்துஅவன்
கையைப் பற்றிக்கொண்டு நடக்கத் தயாரானான். அப்போது, "மேல்வரும்
விளைவுகளை எண்ணாது, காட்டிற்கு வரத் துணிந்துவிட்டாய், எனவே,
எனக்கு எல்லையற்ற இடர் தரப் போகிறாய்"  என்றுஇராமன் வருந்திக்
கூறியதும்,