109

    உற்றுநின்ற துயரம்இது ஒன்றுமே?
    என் துறந்தபின் இன்பம் கொலாம்.
                     (228)

என்று சீறினாள் குயில்போன்ற இனிய குரலை உடையவளான சீதை. 
இதைக்கேட்டதும்.

    பிறிது ஓர் மாற்றம் பெருந்தகை பேசலன்
    செறுவின் வீழ்ந்த நெடுந்தெருச் சென்றனன்.            (229)

என்று, சீதையைத் தேற்ற வேறுவழியறியாத இராமன் மறுவார்த்தை பேசாமல்
தெருவில் நடந்தான் என்றுகம்பன் சீதையொடு வனம்புக நேர்ந்ததைப்
பாடுகிறான்.

அத்யாத்ம  ராமாயணம்

     காட்டில் வாழ்வதால் நேரும் இன்னல்களையும்,  இடையூறுகளையும் 
இராமன் விவரித்துக் கூறக்கேட்ட சீதை, உங்களோடு இருக்கும் போது 
எனக்கு எந்த இடையூறும் நேராது.   பிரிந்திருப்பது தான்கஷ்டம் . 
என்னால் உங்களுக்கு ஒரு தொல்லையும் வராமல் நடந்து கொள்வேன்.

     மேலும், நான் குழந்தையாய் இருக்கும்போது சோதிட அறிஞர் ஒருவர்,
"நீ உன் கணவனுடன்சில காலம் காட்டில் வாழ்வாய்"  என்று கூறியுள்ளார்.
அவர் வாக்கு பலிக்கட்டும் . என்னைத்தடுத்தால் இப்போதே உயிரை
விட்டுவிடுவேன்,42என்று கூறுகிறாள்.

     "ஐய,  தாங்கள் பல பிராமணர்கள் மூலம் பல இராமாயணங்களைக்
கேட்டிருப்பீர்கள். அவற்றுள்எதிலாவது சீதையில்லாமல் இராமன் காட்டிற்குச்
சென்றதாகக் கூறப்பட்டுள்ளதோ?"43(II.4.77 - 78) என்றும் சீதை
விவாதிக்கவே வேறுவழியற்ற இராமன் அவளுடன் கானகம் செல்லத்
தீர்மானிக்கிறான்.

தெலுகு ராமாயணங்கள்

     ரங்கநாதம்,  பாஸ்கரம் ஆகிய இரு தெலுகு ராமாயணங்களும்
பெரும்பாலும் வான்மீகத்தைப்பின்பற்றிச் சீதையின் விவாதத்தைக்
கூறுகின்றன.  பாஸ்கர ராமாயண சீதை,  "நின்னைப் பிரிந்திருப்பதைவிட
இறப்பதே மேலானது. அயோத்தியில் கைகேயிக்கும் பரதனுக்கும் அடிமையாக
என்னால் வாழமுடியாது" என்று உறுதியாகக் கூறுகிறாள்.


42.   நடேச சாஸ்திரி,  பக். 78-79.
43.  அம்பாபிரசாத். பிரதி . 121