தொரவெ ராமாயணம் நான் காடு சென்று 14 ஆண்டுகள் வாழும் ஆணை பெற்றுள்ளேன் என்று இராமன் கூறியதும், அவன்பாதங்களில் விழுந்து வணங்கிய சீதை. "நீ உடல், நான் நிழல்; உடலும் நிழலும், பூவும் மணமும், திங்களும் ஒளியும், அறமும் புகழும் என்றும் பிரிக்க முடியாதன" என்று கூறினாள். இராமனோ, "உன்னால் கொடிய வனத்தில்வாழ முடியாது . உன்னை அழைத்துக்கொண்டு போனால் உன்னுடைய உறவினர் எங்களைப் பழித்துப் பேசுவர். இனி இதைப் பற்றிப் பேச வேண்டாம். என் தாய் கோசலைக்குத் தொண்டு செய்துகொண்டுஇங்கேயே இரு. நீ உடன் வருவேன் என்று சொன்னதே போதும்" என்றான். ‘உன்னுடன் இருக்கும்போது எல்லாத் துன்பங்களும் இன்பமாக மாறிவிடும்’ என்று கூறிய சீதைமேலும் இராமனின் பதிலுக்காகக் காத்திராமல் அவன் கையில் இருந்த மரவுரியைப் பிடுங்கி அணிந்துகொண்டாள்.வேறு எதுவும் கூறவியலாத இராமன் அவளையும் அழைத்துக்கொண்டு சென்றான். மலையாள இராமாயணங்கள் கன்னச ராமாயணத்தில் இராமன் சீதை வாக்குவாதம் விரிவாகக் கூறப்படவில்லை. சீதையின்பிடிவாதத்தை உணர்ந்த இராமன் அவளை உடன் அழைத்துச் செல்ல இணங்குகிறான். எழுத்தச்சன் இப்பகுதியை அத்யாத்ம ராமாயணத்தைப் பின்பற்றிப் படைத்துக்காட்டுகிறார். ஜப்பான் ராமாயணம் போரினால் விளையும் வீண் கொலைகளைத் தவிர்ப்பதற்காகத், தான் அரச துறந்து துறவறம்மேற்கொண்டு காடு செல்கிறேன் என்று அரசன் சாக்கிய முனி கூறியதும், ‘பல்லாண்டுகள் உடன்வாழ்ந்த நான் தங்களைப் பிரிந்து வாழ முடியாது’ என்று கூறி அரசி உடன் செல்ல ஆயத்தமாகிறாள். அப்போது அரசன், "பகைவர்கள் நம் நாட்டின் மீது படையெடுத்து வரினும் நீ இங்கேயே அரண்மனையில்பாதுகாப்பாக இரு’ என்று கூறுகிறான். அரசன் சொல்வதை ஏற்காமல் அரசி பிடிவாதமாகக் காடு செல்கிறாள்.44
44. minoru Hara, p. 342. |