111

அசாமி ராமாயணம்

     இராமன் காடு செல்ல விதிக்கப்பட்டதை அறிந்ததும், "இது வரை என்
உடல் சண்பக மொட்டுப்போல் இருந்தது. ஒரு கருவண்டைப் போல நீ
என்னைச் சற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தாய். அம்மொட்டுநன்கு மலர்ந்து
ஒளி வீசும் பருவத்தை அடைந்து நிற்கும் இச்சமயத்தில் அதை
அனுபவிக்காமல் தியாகம்செய்யவும் என் வாழ்க்கையைப் பயனற்றதாகச்
செய்யவும் நீ ஏன் முயல்கிறாய்?" என்று இராமனை நோக்கிக்கேட்கிறாள்
சீதை.45

உதார ராகவம்

     இராமன் தான் காடு செல்ல நேர்ந்ததை விளக்கி, "நீ இங்கேயே இரு;
நான் வனவாசம்  முடிந்ததும்விரைந்து வருவேன்" என்று கூறியவுடனே
அவனைச் சினந்து நோக்கிய சீதை, "இது வரை நான் அறிந்தஎந்த
இராமாயணத்திலும், இராமனுடன் காடுசெல்லாத சீதையைப் பற்றிக்
கேள்விப்பட்டதே இல்லை"என்று கூறித் தன்னையும் அழைத்துப் போக
வற்புறுத்துகிறாள்.46

துளசி ராமாயணம்

     இராமன் கோசலையிடம் தான்அரசன் கட்டளைப்படி,  காடு செல்ல
இருப்பதைக் கூறும்போது  அங்கிருந்தசீதை தானும் உடன் வருவதாகக்
கூறுகிறாள். அப்போது கோசலை முதலானோர்க்குச் சேவை செய்யத்தக்க
அவளது கடமையை எடுத்துக் கூறிக் காட்டு வாழ்க்கையின்
இடையூறுகளையும் விளக்கிக் கூறுகிறான்இராமன். அதைக் கேட்ட சீதை.

    கொழுநனைப் பிரிவதினும் கொடிய துன்பம்
    இவ்வுலகில் வேறெதுவும் இல்லை;  நீங்கள் இல்லாத
    சொர்க்கமும் எனக்கு நரகமே.  கணவனைப்
    பிரிந்த மனைவி உயிரற்ற உடலுக்கும்,  நீரற்ற
    ஆற்றுக்கும் சமம்.....நீங்கள் திரும்பி வரும்
    வரையில் நான் உயிரோடு இருப்பேன் என்று
    நீங்கள் நம்பினால், நீங்கள் என்னை
    அயோத்தியில் விட்டுவிட்டுச் செல்லலாம்.        47
(II. 65-69)


45. Biswanarayan. "Ramayana in Assamese Literature" Ramayana
   Tradition inAsia.
p.589
46. Shankar Raju Naidu. p. 34
47. ibid,  p.149.