112

என்று கூறவே இராமன்,  "நான் பிரியின் இவள் உயிர் தரியாள்"  என்று
நினைத்துச் சீதையையும்உடன் அழைத்துச் செல்ல உடன் பட்டான்.

2.3.2. இலக்குவனும் உடன்வர இராமன் இசைதல்

வான்மீகம்

     இலக்குவனும் தன்னுடன் வனவாசத்திற்கு வர அனுமதி கேட்ட போது 
இராமன் அவனை நோக்கி,  "நம்தாயர் இருவரையும் காப்பாற்றும்
பொறுப்பை நீ செய்துகொண்டிரு.  தசரதரோ  கைகேயியின்  மயக்கத்தில்
உள்ளார். அவளோ அரசு கிடைத்த வெற்றிப் போதையில் உள்ளாள். 
பரதன் கைகேயி வயப்பட்டவனாய்நம் தாயரை  நினைக்கவும் மாட்டான்.
எனவே,  நீ இங்கிருந்து அவர் களுக்குச் சேவை செய்வதே சிறந்தது"
என்றான்.  இதனைக் கேட்ட  இலக்குவன்,  "வீரத்திற் சிறந்தவரே,  பரதன்
அறம் திறம்பாத நெஞ்சினன்; கோசலைக்கும்,  சுமித்திரைக்கும்  தக்க
மரியாதை செய்வான்.  இந்த விஷயத்தில்  தங்களுக்குச்சந்தேகமே
வேண்டாம்.  நான் உங்களுடன் கூடவே இருந்து காட்டில் தக்க சேவை
செய்வேன்.  உங்களையும்சீதையையும் நன்கும பாதுகாப்பேன்" என்று
இறைஞ்சிக் கூறினான். இராமனும் மேற்கொண்டு எதுவும் கூறுஇயலாதவனாய்
இலக்குவனும்  உடன்வரப்  பணித்தான்.   (II. 31. 7,8, 13, 14, 26,27).

     பின்னர்த் தமசா  நதிக்கரையில்  மூவர்  மட்டுமேத தங்கிய முதல்
நாளிரவில் இராமன்கோசலை,  சுமித்திரை இருவருக்கும் பாதுகாப்பாக
இருந்து சேவை செய்வதற்காக இலக்குவனை அயோத்திக்குப்போகச்
சொல்லுகிறான். அப்போது இலக்குவன், ‘இராகவ, நானும் சீதையும் தங்களை
விட்டுப் பிரிந்து உயிர் வாழமாட்டோம். குளத்திலிருந்து எடுக்கப்பட்ட
மீன்களைப் போலப் பிரிந்த சிறிது நேரத்தில்உயிர் விட்டு விடுவோம். 
உங்களை விட்டுப் பிரிந்து சுவர்க்கத்துக்கும் போக மாட்டேன்’ என்று
உறுதியாகக் கூறிவிடுகிறான். (II. 53)

கம்ப  ராமாயணம்

     பெற்றோர்க்குத் துணையாக அயோத்திலேயே இருக்குமாறு வேண்டிக்
கொள்ளப்பெற்ற  இலக்குவன்இராமனை நோக்கி,  "நான் உனக்கு இழைத்த
பிழை என்ன? நீ அரசிழந்தபோது பொங்கியெழுந்தஎன்னை ‘அடக்கு’ என
அடக்கிய சுடு சொல்லினும் கொடிய சொல்லாகிய ‘இரு’ என்னும் ஆணைய
இடுகிறாய்.