நீர் உள எனின் உள, மீனும் நீலமும், பார் உள எனின் உள யாவும்;..... நானும் சீதையும் ஆர் உளர் எனின் உளம்? அருளுவாய். (II. 4.152) என்னும் இலக்குவனின் வாதத்தைக் கேட்ட இராமன் ஒன்றும் உரைக்க நேர்ந்திலன். 2.3.3. சுமித்திரையின் அறிவுரை வான்மீகம் காடு செல்ல ஆயத்தமான இராமன், சீதையும் இலக்குவனும் உடன்வரத் தசரதனையும் கோசலையையும்வணங்கி விடைபெற்றுக் கொண்டு சுமித்திரையிடம் வந்து அவளைத் தொழுது நின்றான். அவர்களுக்குஆசி வழங்கிய பின்னர்ச் சுமித்திரை இலக்குவனை நோக்கிக் குழந்தாய், நீ வனவாசம் செய்வதற்காகவே பிறந்தவன்; இராமனிடத்தில் பக்திபூண்டவனாய் இருஅரசனாகப் பொலிந்தாலும் தவசியாக மெலிந்தாலும் உலகில் இராமன் ஒருவனே உனக்குக் கதி. இராமனைத்தசரதனாகவும், சானகியை நானாகவும் வனத்தை அயோத்தியாகவும் கருதிக் கொண்டு, மனக்குறையற்றவனாகப்போய் வா. (II. 40 . 5, 6, 10). | என்று அறிவுரை கூறி வாழ்த்தி வழியனுப்புகிறாள்.48 கம்பராமாயணம் இலக்குவனின் சீற்றம் தணிந்த பின், இராம இலக்குவர் இருவரும் சுமித்திரைகோயில்புக்கு அவள் இணையடிம இறைஞ்சி விடைபெறாநிற்கையில் சுமித்திரை. ஆகாதது அன்றால் உனக்கு; அவ்வனம் இவ் அயோத்தி மாகாதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும் போகா உயிர்த் தாயர் நம் பூங்குழல் சீதை என்றே ஏகாய் இனி இவ்வயின் நிற்றலும் ஏதம்...... பின்னும் பகர்வாள் மகனே இவன்பின் செல், தம்பி என்னும் படி அன்று, அடியாரின் ஏவல் செய்தி; மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா, அஃது அன்றேல் முன்னம் முடி.......
48. |