வான்மீகத்தில் இராமன் சீதை இருவரின் உடன்காலச் சமுதாயத்திற்கேற்ற வாதப் பிரதிவாதங்கள்நம்மை இன்புறுத்துகின்றன. எனினும், இவ் இன்புறுத்தலில் கால, இடப் பண்பாட்டு வேறுபாடுகளால் விளையும் இடைவெளி நிலவுவதை உணர்கிறோம். கம்ப ராமனும் சீதையும், கால வேறுபாட்டால்இடைவெளி உண்டாகாத அகப்பொருள் மரபினையொட்டிப் படைக்கப்பட்டிருப்பதால், சீதையின் வாதங்கள் நம்முடைய வாதங்களாக உணரப்பட்டு நம்மை ஈர்த்தின்புறுத்தும் தன்மையவாய் அமைந்துள்ளன. துளசிதாசரின்சீதையும் பொதுமானுட உணர்வுகளை உடையவளாகப் படைக்கப்பட்டிருப்பதால் வாசகர்கள் அவளுடன் ஒன்றியஉணர்வினராய் இன்புறும் தன்மையை அடைகிறார்கள். "இல்லற இன்பத்தைத் துய்ப்பதற்குரிய பருவம் வாய்த்திருக்கும் இந்தச் சமயத்தில் என்னைத்துறந்து செல்ல முயல்வது ஏன்?" என்று மாதவ கந்தலியின் அசாமிய சீதை வினவுமிடத்து ரீதி இலக்கியப்பண்பாட்டின் எதிரொலியும், பாகவத இலக்கியத்தின் செல்வாக்கும் (krishna cult), அசாமி ராமாயணத்தை ஆக்குவித்தோனாகி ய மகாமாணிக்கியன் என்னும் வராக அரசரின் சிருங்காரப் பிரியமும்வெளிப்படக் காண்கிறோம். தான் கணவனுடன் காடுறை வாழ்க்கை பெறும் கிரக நிலையுடையவன் என்று சிறுவயதிலேயே சோதிடர்கள்கூறக் கேட்டிருப்பதாக வான்மீகச் சீதை கூறுகிறாள். பின்னர் எழுந்த அத்யாத்ம ராமாயணமும், எழுத்தச்சன் ராமாயணமும் வான்மீகத்தைப் பின்பற்றி இதே செய்தியைக் கூறுகின்றன. கம்பராமாயணமும் தெலுகு ராமாயணங்களும், கன்னட தொரவெ ராமாயணமும், மலையாள கன்னச ராமாயணமும், துளசி ராமாயணமும் இச்செய்தியைக் குறிப்பிடவில்லை. இராமாயண நூல்களில் சீதையைப் பற்றி நாம்கேள்விப்படும் இந்த இரண்டாவது சோதிடக் கருத்து மெய்ம்மை யாகிச் செயல்வடிவம் பெறுவதைஅயோத்தியா காண்டத்திலே காண்கிறோம். முதல் சோதிடக் கருத்து (சீதையின் காரணமாக இராவணன்அழிவான்) யுத்தகாண்டத்தில் செயலாக்கம் பெறுவதைப் பின்னர்க் காணலாம். இனி எந்த இராமாயணத்திலும் சீதையை விட்டுவிட்டு இராமன் தனியாகக் காடு சென்றதாகக்கூறப்படவில்லை என்னும் குறிப்பைத் தனக்குச் சாதகமான வாதமாகச் சீதை உரைப்பதாக அத்யாத்மராமாயணம் கூறுகிறது. இவ்வாறே சாகல்யமல்லரின் உதார ராகவம் என்னும் காவியமும், எழுத்தச்சன ராமாயணமும் கூறுகின்றன. இங்கு ஆய்வுக்கு உட்பட்ட வேறெந்த இராமாயண |