நூலும் இச்செய்தியைக் குறிப்பிடவில்லை. இச்செய்தி பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவிக்கிறது. முதலாவதாக, "இராமாயணப் பாத்திரங்கள் தம் காப்பிய நிகழ்ச்சியை விட்டு வெளியேறி வாசகர் நிலையை அடைந்து விடுகின்ற காலவழு (Anachronism) மற்றும் பாத்திர மரபு வழு என்னும் படைப்புக் குற்றங்களுக்கு இச்செய்தி எடுத்துக்காட்டாக அமைந்துவிடுகிறது. இவற்றுள் காலவழு என்னும் குற்றம் நாடகம் போன்ற இலக்கிய வகைகளுள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாகத் திறனாய்வு உலகம் கருதுகிறது. ஆனால், பாத்திரங்கள் கதைப் பின்னலை விட்டுப் புறம் போந்து வாசகர்நிலை எய்தித் தம்மைப் பற்றியே விவாதிப்பதாக அமைந்துள்ள இத்தகைய மாற்றம், உலகக் காப்பிய வழக்கில் வேறெங்கும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. இரண்டாவதாக, இராமனே தன் கதையைப் பிறர்பாடக் கேட்டதாகக் கூறப்படும் செய்தி இப்போதுள்ளவான்மீகி ராமாயணத்தின் முற்பகுதியில் காணப்படுகிறது. இப்போது வழங்கிவரும் வான்மீகத்தின் மூலத்தன்மை (originality) குறித்துப் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் இராமாயண அறிஞர்களிடையே நிலவி வருகின்றன.49 இப்போதுள்ள பாலகாண்டத்தை வால்மீகி எழுதவில்லை. அயோத்தியாகாண்டமே காப்பியத் தொடக்கமாக இருந்தது. பின்னர்ப் பாலகாண்டத்தைப் பிறர் இயற்றிச் சேர்த்துவிட்டனர் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இக் கருத்தின்படி காளி தாசன் காலத்துப் புலவர் ஒருவர் அல்லது அவனுக்குச் சற்றுப் பிற்பட்டு வந்த புலவர் ஒருவர் இதனை இயற்றிச் சேர்த்திருக்கலாம்.இராமன் தன் கதையைத் தானே கேட்கும் இப்பகுதியை மனத்திற் கொண்டு அத்யாத்ம இராமாயணம் மேற்கண்டசெய்தியைப் படைத்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அத்யாத்ம ராமாயணத்தின்ஆசிரியர் இராமசர்மா என்று அம்பா பிரசாத் போன்ற அறிஞர்கள் குறிப்பிடினும் இந்நூலின் காலத்தையோ, ஆசிரியர் பெயரையோ ஐயத்திற்கிடமின்றி அறிய இயலவில்லை என்றும், இது பல்வேறு முந்தைய நூல்களிற்காணப்படும் செய்திகளின் தொகுப்பு என்றும் அறிஞர்கள் பலர் கருத்துரைத்துள்ளனர்.50 இனித் தற்போதுள்ள வான்மீக பாலகாண்டம், மூலம், பிற்சேர்க்கை என்னும் இரண்டு அடுக்குகளைஉடைய கலவைப் பகுதியாக விளங்குகிறது என்று கூறுவாரும் உளர்.
49. “kanda structure of Ramayana", Purana sullefin Ayodhya specialissue, vol XXXIII, no.2 (Varanasi july 1991), pp. 103-107. 50. A.N. jani, pp. 40 - 41 |