இதனாலும் பாலகாண்டப் பகுதியின் மெய்ம்மைத் தன்மை ஐயுறத் தக்கதாக அமைந்துள்ளது என்பதுஉறுதியாகிறது. இச்செய்திக்குப் புதுக்கிச் சேர்த்த வான்மீகி ராமாயணப் பாலகாண்டத்தைத்தவிர வேறு ஏதேனும் ஆதாரம் இருக்குமா என்பதும் ஆராய்தற்குரியது. இடைக்கால இராமகாதை நூல்களுக்கெல்லாம் அடிப்டையாக அமைந்த புஷுண்டி ராமாயணத்தில் இச்செய்தி குறிப்பிடப்படுகிறதா என்று அறிய இயலவில்லை. இவ்வாறு புதியதொரு சுவை பயக்கும் எனக் கருதிச் சேர்க்கப்பெற்ற இச்செய்தி பல வினாக்களுக்குவித்திட்டுள்ளதாகத் தோன்றுகிறது. கணவனை விட்டுப் பிரியாமல் இருக்கக் கருதி அயோத்தியில், தன்னரண்மனையில், உறவினர்களுடன், உரிமையாக வாழும் நிலையைத் துறந்து காட்டு வாழ்க்கையை வலிந்து மேற்கொண்ட சீதை, பல மாதங்கள்தன்இன்னுயிர்க் கணவனிடமிருந்து பிரிந்து, இலங்கையின் ஒரு சோலையில் அரக்கரிடையே, சிறைப்பட்டுவாழ நேர்ந்தது என்ற காப்பியப் போக்கினைக், காப்பிய முரண்குறிப்பை நோக்குமிடத்து உலகவாழ்க்கையில் விதியின் வலிமையை (destiny) அல்லது மானுட நிகழ்ச்சிகளின் முரண்பாட்டை (irony of events) உணரும் வாய்ப்பு நமக்கு ஏற்படுகிறது. சிறையெடுத்துச் செல்லப்பெற்ற ஒரு பெண்ணிற்காகப்பெரும்போரில் (பத்தாண்டுப் போர்)ஈடுபட்ட வீரயுகத் தலைவர்கள் வேறொரு பெண்ணின் பொருட்டுப் பிளவுபட்டு நின்று, இறுதியில் பகைவரை முற்றிலும் அழித்த பின்னர், தாம் வந்த நோக்கமாகியசிறைமீட்பைச் செய்யமாமல் மீளுதலையும், அப்பெண்ணே வர விரும்பாத நிலையினையும் ஹோமரின்தலைக் காப்பியமாகிய இலியதம் காட்டுகிறது. முடியரசர் ஆட்சி மரபை அதாவது, எதேச்சதிகாரமரபை அழித்து மக்களாட்சி மலரச் செய்யவேண்டும் என்னும் நோக்கத்துடன் தொடங்கப்பெற்றபிரஞ்சுப் புரட்சி முடிவில் நெப்போலியன் என்னும் ஓர் எதேச்சதிகாரியின் ஏற்றத்தில் முடிந்ததைஅனைவரும் அறிவர். இவ்வாறே தோற்றமும் விளைவும், நோக்கமும் முடிவும்ம முரண்பட்டு நிகழும் மானுடநிகழ்ச்சிகள் பலவாகத் தொடர்ந்து நிகழும் இவ் உலகியல் தன்மை. "என்னையே என்னையே இவ் உலகியல் இருந்த வண்ணம்" என்னும் கம்ப இராமனின் வியப்பில் எதிரொலிக்கிறது. இலக்குவன் இலக்குவன் அயோத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்கு இராமன் தரும் காரணங்களும் அவற்றிற்கு எதிராகஇலக்குவன் |