118

கூறும் வாதங்களும் பெரும்பாலான இராமாயண நூல்களில் ஒரே மாதிரியாகக்
கூறப்பட்டுள்ளன. வான்மீகம்இதனை மிக விரிவாகவும் கம்பராமாயணம்
இதை மிகச்  சுருக்கமாகவும்  கூறுகின்றன. எனினும், கம்பனின்ஒருபாடலே
இலக்குவனின் கருத்தைத் தெளிவாகவும் உறுதியாகவும் கூறிவிடுகிறது. அதற்கு
மேல் இராமன்கூறுவதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலையில் இலக்குவன்
கூற்றைப் படைத்திருக்கும்  கம்பனின் கவித்திறம் வியத்தற்குரியது.
இப்பாடலுக்குரிய உயிர்க்கருத்தாய மீன் உவமை வான்மீகத்திலேயே
காணப்படினும்,அதனைக் கவிதையாக்கிய அழகில் (rhetorical question)
கம்பனின் கவித்துவம் மிளிர்வதைஎவரும் எளிதிற் காணலாம்.

சுமித்திரை

     அறத்திற்கு அன்பு சார்பு என்பதைக் கோசலையும், மறத்திற்கும் 
அஃதே துணை  என்பதைக் கைகேயியும்காட்டி நிற்க, மிகுதியும்
பாத்திரப்படுத்தப் பெறாத சுமித்ரை தனக்குக் கிடைத்த மிகக் குறைந்த 
வாய்ப்பிலேயே அவ்விருவர்தம் அன்பினையும் விஞ்சும் அளவுக்குத் தன்
பேருள்ளப் பெருமையைக் காட்டிவிடுகிறாள். மிகுதியும் பேசாத பாத்திரம்,
பேசப்படாத பாத்திரம்,  சுமித்திரை;  எனினும் அவள் இலக்குவனுக்கு
விடைதரும் முகமாகப் பேசிய ஒரு சிறு குறிப்பு இராம காதையின் முழுப்
பொருண்மையை யும் நமக்கு உணர்த்திவிடுகிறது.மானுட நிலையில், 
"ஆரணியம் சென்றாலும் அரசன் (தசரதன்) இராமனே;  அவன் இருப்பிடமே
அயோத்தி;சீதையே தாய்.  நீ அனுபவிக்கப்போவதுதான் இராமராஜ்யம்"
என்னும் வெளிப்படைப் பொருளும், "செம்மைதிறம்பிய இவ் அயோத்திதான்
காடு; ஆணையிடும் ஆற்றலுடைய அரசன் இங்கு யாருமில்லை. மகனொடு
காடு செல்ல அல்லது காடு செல்வதைத் தடுக்குமளவுக்கு அன்போ
ஆற்றலோ உடையதாயர் இங்கில்லை. இங்கு நடைபெறுவது
அரசாட்சியுமன்று" என்னும் குறிப்புப் பொருளும் தருவதாகச் சுமித்திரையின்
பேச்சுஅமைந்திருப்பதைக் காணலாம். அவதார நிலையில், "உயிர்கட்குத்
தாயும் தந்தையுமாக அவளும் அவனும்விளங்குகின்றனர். அவர்களின்
இருப்பிடமே திருத்தலம் (அர்ச்சாவதாரம்).  அங்கு நடைபெறுவதே
அருளாட்சி.  அவ் ஆட்சிக்கு ஆட்பட எழாது இங்குக் காலம் கழித்தல்
உயிர்க் குற்றம்" என்னும்பொருளும் சுமித்திரையின் கூற்றில் தொனிக்கக்
காணலாம்.

     இனி வான்மீகம் கூறாத மற்றொரு கருத்தையும் கம்பன் படைத்த
சுமித்திரை கூறுகிறாள். "அண்ணன்என்ற உரிமை உறவோடு நீ இராமனுடன்
செல்லாதே. அவனுக்குத் தொண்டு செய்