யும் அடியவனாகச் செல்" என்னும் சுமித்திரையின் அறிவுரை மேற்கூரிய இருவகை நிலைகட்கும்பொருந்தி நிற்பதாகக் கொள்ளலாம். 2.4. இராமன் - குகன் சந்திப்பு வான்மீகம் இராமன் சுமந்திரனுடன் கங்கைக் கரையைச் சென்றடைந்ததும் இராமனின் தோழனும்சிருங்கிபுரத்து அரசனுமான குகன் என்னும் வேடர் தலைவன் அவனைக் காண வந்தான். இராமன் இலக்குவனுடன் சென்று அவனை எதிர்கொண்டு வரவேற்றுத் தழுவிக் கொண்டான். மரவுரி உடுத்திய இராம இலக்குவர்களைக்கண்டு வருந்திய குகன் அவர்களுக்குப் பலவகையான பொருட்களைக் கொண்டுவந்து தர, அவற்றை அன்புடன் நோக்கிய இராமன் துறவற வாழ்க்கையினர்க்கு அவை வேண்டாம் என்று விலக்கி நீரையுண்டு அன்றிரவுஉறங்கினான். இலக்குவனுடன் சேர்ந்து குகனும் இரவில் விழித்திருந்து காவல் செய்தான். மறுநாள்குகன் கொணர்ந்த ஒடத்தில் ஏறி மூவரும் கங்கையைக் கடந்தனர். (ii/50-52) கம்ப ராமாயணம் கங்கைக் கரையை அடைந்ததும் இராமனைக் காண விரும்பிய குகன் இலக்குவன் உதவியால் இராமனைக்கண்டு களிகூர்ந்து தான் கொணர்ந்த தேனையும் மீனையும் அவனுக்களித்தான், அவன் உபசரிப்பில்மகிழ்ந்த இராமன், அன்பினில் தந்த பொருள்களெல்லாம் தூய்மையானவை என்று கூறி மறுநாள் காலை ஆற்றைக்கடக்கஓடம் தருமாறு வேண்டினான். இராமனைப் பார்த்த கண்ணை மாற்ற விரும்பாத குகன் இராமனின் இசைவோடு இரவு முழுவதும் இலக்குவனுடன் இருந்து காவல் புரிந்தான். மறுநாள் மூவரையும் நாவாயில் ஏற்றிக்கரை சேர்த்துத் தானும் அவர்களுடன் வருவதாகக் கூறினான். அப்போது இராமன். என்னுயிர் அனையாய் நீ, இளவல் உன் இளையான், இந் நன்னுதலவள் நின்கேள்......... முன்புளம் ஒரு நால்வேம் முடிவுளது என உன்னா அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம். (ii. 7. 42-43) என்று அவனை உடன்பிறந்தவனாக ஏற்றுக்கொண்டு ‘வடதிசை வரும் அந்நாள் நின்னுழை வருகின்றேன்’என்று கூறி விடைபெற்றான். |