120

அத்யாத்ம ராமாயணம்

     வான்மீகத்துடன் பெரும்பாலும் ஒத்துச் செல்கிறது (சருக்..6)

துளசி ராமாயணம்

     குகனுடன் நட்புக் கொண்டதும் சுமந்திரனை அயோத்தி செல்லுமாறு
அனுப்பிவிட்டுக் கங்கைக்கரையை அடைந்து நாவாய் வேட்டுவன் ஒருவனை
அணுகி நாவாயில் ஏற முற்படுகையில் தடுத்த அவன்,  "இராமன் தன்
திருப்பாதங்களை நீரால் கழுவித் தூய்மை செய்தாலன்றி அவனை ஓடத்தில்
ஏற்றமாட்டேன்; ஏனெனில்,  கல்லையே பெண்ணாக்கிய அவனுடைய
திருவடிகள் மரமாகிய என் ஓடத்தைப்  பெண்ணாக்கிவிட்டால்என் பிழைப்பு
கெட்டுவிடும்" என்று கூற, புன்முறுவல் பூத்த இராமன் அவன் விருப்பத்திற்கு
இணங்க,மூவரும் குகனுடன் கரையைக் கடக்கின்றனர் பின்னர்ப்
பரத்துவாசரின் ஆசிரமம் அடைந்ததும் குகனைத்திருப்பி அனுப்பிவிட்டு
மேலே வான்மீகி ஆசிரமம் நோக்கி நடக்க லாயினர்.

தொகுப்புரை

     ஏனைய இராமாயணங்கள் இப்பகுதியைச் சிறப்பித்துக் கூறவில்லை; 
கூறுமிடத்தும் வான்மீகத்தையோஅத்யாத்மத்தையோ பின்பற்றிச் செல்கின்றன.
வான்மீகம், அத்யாத்மம், மானசம் ஆகிய மூன்றிலும் குகன்  சிறுங்கிபேரச் 
சிற்றரசனாகவும், இராமனுக்கு உற்ற உயிர்த் தோழனாகவும்
கூறப்படுகிறான்.குழந்தைப் பருவத்தில் இருந்தே இராமனும்குகனும்
நண்பர்களாக இருந்து வந்தனர் என்று கீர்த்திவாகனின் வங்காள ராமாயணம்
குறிப்பிடுகிறது.51 ஆனால், கம்பஇராமன் குகனை முதன்முதலாகக்
கங்கைக்கரையில் வனவாசத்தின்போதுதான்சந்திக்கிறான். "புணர்ச்சி பழகுதல்
வேண்டா; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்" என்னும்நட்பிலக்கணத்தை
இலக்கிய மரபாக உடைய கம்பன்,முன்பின் அறியாமல் உழுவலன் பினராதல்
சிறப்புடைத்துஎனக் காட்ட விரும்பி அவர்களது நட்பின் உணர்ச்சியை
விளக்க அவர்களை உடன்பிறந்தவர்களாகவேபடைத்துக்காட்டுகிறான்.
இராமன்பால் குகன் கொண்டிருந்த நட்பு கங்கையினும் ஆழமானது
என்பதைக்கம்பன் காப்பியம் மிக அழகாக உணர்ச்சிபொங்கக் காட்டுகிறது.
முன்னரே அறிமுகமான நண்பர்களாகக்காட்டும் பிற காப்பியங்களில்
இத்தகைய உணர்ச்சியொத்த பக்தியைப்


51.  shankar Raju naidu. p 44