123

3.2 பரதன் - குகன் சந்திப்பு

     படையுடன் கங்கைக் கரையை அடைந்த பரதனைக் கண்டு குகன்
முதன்முதலில் ஐயுற்றுப்பின்னர்ப் பரதன் இராமனிடம் அன்பு பூண்டவனாய்
வந்துள்ளான் என அறிந்ததும் மகிழ்ந்து, இராமன்தங்கியிருந்த இடம்,
இலக்குவனின் அரும்பண்புகள் போன்றவற்றைப்பற்றி அவனுக்கு விளக்கிக்
கூறி,பரதனும் அவன் படைகளும் தாயருடன் கங்கைக் கரையைக் கடந்து
செல்ல உதவுகிறான். இந்நிகழ்ச்சியைவான்மீகியோடு பெரும்பாலும் ஒத்து
ஏனைய இராமாயணங்களும் விளக்குகின்றன.

     பரதனின் வரவுக்கான எண்ணம் பற்றிக் குகன் ஐயுற்றுக் கூறும்
செய்திகள்வான்மீகத்திலும். அத்யாத்மத்திலும், துளசியிலும், பிற தெலுகு,
கன்னட ராமாயணங்களிலும் சுருக்கமாகவும்கம்பனில் மிக விரிவாகவும்
பேசப்படுகின்றன. மலையாளக் கன்னச ராமாயணம் இதைப் பற்றிக்குறிப்பாக
எதுவும் கூறவில்லை. திபேத்திய ராமாயணத்தில் பரதனைப் பற்றிய குறிப்பே
எதுவுமில்லை.தாய், மலேசிய, லாவோஸ் போன்ற தென்கிழக்காசிய நாட்டு
ராமாயணங்களில் இந்நிகழ்ச்சிகள்சிறிதும் இடம்பெறவில்லை.

     பரதனும் குகனும் சந்திக்கும் முதல் நிகழ்ச்சியைப் படைப்பதில் கம்பன்
மிகவும் கவனஞ் செலுத்தியிருக்கக் காண்கிறோம். குகனைப் பற்றிச் சுமந்திரன்
மூலம் ஓரளவு அறிந்திருந்தபரதன், அவன் தன்னைக் காண வந்திருக்கிறான்
என்று அறிவிக்கப்பட்டதும், ‘தன்னை வந்துபார்க்கட்டும்’ என்று அதிகார
மரபில் கூறுகிறான். பின்னர்க் காணிக்கைகளுடன் குகன் வந்ததும்,
“பரத்துவாஜர் இருப்பிடம் செல்லும் வழி தெரியவேண்டும். அதற்கு முன்னர்
நாங்கள் கங்கையைக்கடக்கவேண்டும்” என்று கூறுகிறான். குகன்
மறுமொழியாகத், “தாங்கள் கலைப்படவேண்டாம்;  நாங்கள் உதவுகிறோம்.
அதற்கு முன்னர் நானறிய விரும்புது ஒன்று உண்டு. தாங்கள் இராமர்மீது
அன்புள்ளவராய்வந்துள்ளீரா? தாங்கள் பெரிய சேனையுடன்
வந்திருப்பதால் எனக்கு ஐயமுண்டாகிறது” என்றுவினவுகிறான் என்பது
வான்மீகம் (சருக்கம் 85). பரதனின் சேனையைக் கண்டு ஐயுற்ற குகன் தன்
படைகளைத் தயார் நிலையில் தென்கரையில் இருக்கச் செய்து, தவவேடம்
கொண்டிருந்த பரதனின்குறிப்பறிய தான் மட்டும் நாவாயில் வடகரை
வந்தடைந்தான். சுமந்திரனால் குகனைப் பற்றி அறிந்தபரதனும்
சத்துருக்கனனும் கங்கைக் கரைக்கு வந்து குகனை வரவேற்கக்
காத்திருந்தனர். கரையேறிய குகன்உடனே பரதன் கால்களில் வீழ்ந்து
வணங்க, பரதனும் குகனடியில் வீழ்ந்து வணங்கி ஒருவரை