124

யொருவர் தழுவிக் கொண்டனர். தழுவின குகன், ‘எய்தியது என்னை’
என்று கேட்க,‘தந்தை முன்னையோர் முறையினின்றும் தவறினன். அதனை
நீக்கவும், மன்னனை அழைத்துப் போகவும்வந்தேன்’ என்று பரதன்
விடையிறுத்தான் என்பது கம்ப ராமாயணம் ( II  12.31-33).

     வடகரையில் தன்னை வரவேற்க நின்றிருந்த பரதனையும்
சத்துருக்கனனையும் கண்டமாத்திரத்திலேயே குகன் பரதனை முழுவதுமாகப்
புரிந்து கொண்டான் என்பதை

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான் ; தவ வேடம் தலை நின்றான்
துன்பம் ஒரு முடிவில்லை ; திசை நோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான்
                                          (II 12.30)

என்னும் ஒரே பாடலில் மிக அழகாக, மிக உருக்கமாகக் கம்பன் சித்திரித்துக்
காட்டியிருக்கும் திறம் நினைந்து நினைந்து மகிழத்தக்கதாக அமைகிறது.
வான்மீகத்தில் செய்தியாகக்கூறப்படும் கருத்துகள் கம்பன் கையில்
சொல்லோவியங்களாக மலர்ந்திருக்கக் காண்கிறோம்.பரதனின் வேடமே
குகனுக்கு எல்லாவற்றையும் உணர்த்தி விடுகிறது. வான்மீக பரதன் இராமன்
உறங்கியஇடத்தையும் பட்டதுயர்களையும் குகன்வழி அறிந்த பின்னரே
தானும் மரவுரியணிந்து துறவுக்கோலம்பூணுகிறான். இதனைச் சற்று முன்னாக
நகர்த்தி ஓர் உணர்ச்சி வெள்ளத்தையே குகன் உள்ளத்தில்பாயவிட்ட
கம்பனின் கலை முதிர்ச்சியை என்னென்பது?

     இவ்வாறே பரதனைக் குகன் புகழுமிடத்தும், தாயரைப் பரதன் குகனுக்கு
அறிமுகப்படுத்துமிடத்தும்,கோசலை குகனுக்கும் பரதனுக்கும் தெளிவுரை
கூறுமிடத்தும் வெளிப்படும் கம்பனின் தனிப்பட்ட கவித்திறம்விரிவஞ்சி
இங்கு விளக்கப்படவில்லை.

3.3 பரதன் - இராமன் சந்திப்பு

வான்மீகம்

     சேனையுடன் வரும் பரதனைக் கண்டு வெகுண்டு போர்க் கோலம்
பூண்டெழுந்தஇலக்குவனுக்கு இராமன் பலவாறு அறிவுரை கூறி இறுதியாக,

உடன்பிறந்தவன், தனக்கு உயிரான உடன்பிறந்தவனை எவ்வாறு கொல்லுவான்? நீ இராச்சியத்தின் பொருட்டு இவ்வாறு
கூறுவாயானால் நான் பரதனைக் கண்டவுடன் இராச்சி