125

யத்தை உனக்குக் கொடு’ என்று கூறுவேன். பரதனும் சரியென்றே சொல்லுவான் (சருக்கம் 97).

என்று கூறியதும் இலக்குவன் சீற்றம் தணிந்து சமாதானமானான். பின்னர்ப்
பரதனும் சத்துருக்கனனும் வந்து இராமனைத் தொழ அவனும் அவர்களை
அன்புடன் தழுவி அணைத்துக் கொண்டுபரதனுக்கு அரச நீதியை மிக
விளக்கமாகப் போதிக்கிறான். அதன் பின்னர்த் தசரதன் மறைவு கேட்டு
இராமனும் சீதையும் வருந்திப் புலம்பி ஈமக்கடன்களைச் செய்கின்றனர்.
பின்னர் இராமன் ஒருவாறுமனந்தெளிந்து வசிட்டன் முதலானோரைச்
சந்தித்துப் பேசுகிறான். அப்போது இராமனை அயோத்திக்குத்திரும்பி
அரசை ஏற்றுக்கொள்ளுமாறு பரதன் வேண்ட, தந்தையின் கட்டளையை
மறுத்தல் அறமாகாது ; எனவே, நான் இங்கிருத்தலே சரி ; நீ அரசனாக
இரு என்று இராமன் கூறுகிறான். இதனை ஏற்றுக்கொள்ளாதபரதன், தசரதன்
பிழையையும், கைகேயியின் பிழையையும் நீக்கி அவர்களை அறம்
பிழையாதவர்களாகச்செய்யவேண்டுமானால், நீ மீண்டு வந்து அரசனாதலே
தக்கது என்று இராமனை வற்புறுத்துகிறான் (சருக்கம்104-105). இதனைக்
கேட்ட இராமன், “உத்தம குணமுடையவனே, இதில் தந்தையின்
பிழையுமில்லை ; தாய் கைகேயியின் பிழையுமில்லை ;  நம் தந்தையார்
உம் தாயான கைகேயியை மணஞ்செய்துகொள்ளும்போது, “தங்கள்
பெண்வயிற்றிற் பிறக்கும் புதல்வனுக்கு இராச்சியத்தைக் கொடுக்கிறேன்”
என உன் பாட்டனாருக்கு வாக்களித்திருக்கிறார்.52 பின்னர் ஒரு சமயம்
யுத்த சேவைக்கு மகிழ்ந்துஉன் தாயாருக்கு நம் தந்தையார் இரண்டு
வரங்கள் தந்துள்ளார். அவற்றின்படிதான் நான் காட்டுக்குவந்துள்ளேன்.
உனக்கு அரசாட்சியும் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இருவர் மீதும்
பிழையில்லை.மூத்தவன் என்னும் வாதத்தை விட்டுவிட்டு அயோத்தி
சென்று தம்பி சத்துருக்கனனின் உதவியுடன் நல்லாட்சிநடத்துவாயாக
என்று இராமன் இறுதியாக் கூறுகிறான் (சருக்கம் 107). மூத்தோன்
அரசாள்வதே முறைஎன்று கூறி வற்புறுத்திய வசிட்டன் கூற்றையும்
இராமன் ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியாகப் பரதனின்வேண்டுகோட்கு
இணங்கித் தன் திருவடிகளைப் பொற்பாதுகைகளில் பதித்துக் கொடுக்கவே,
பரதன்அவற்றைப் பெற்றுக்கொண்டு அவற்றின் பிரதிநிதியாக ஆள்வேன்
என்று கூறிவிட்டு வனவாசம் முடிந்ததும்அயோத்திக்கு இராமன்
திரும்பவில்லையாயின் தீப்


52. ****
    (Baroda edition II. 99.3; Dharmalaya edition II. 107.3)