126

பாய்ந்து உயிர்விடுவேன் என்று சபதமுரைத்து அயோத்திக்குத்திரும்பினான்
(சருக்கம்  III,  112) என்று வான்மீகம் காட்டுகிறது.

அத்யாத்ம ராமாயணம்

     பரதனின் வேண்டுகோளைக் கேட்ட இராமன், ‘பரதனே, நம்
தந்தையார்கைகேயியின் வார்த்தைகளில் மயங்கியோ, உணர்வு அற்ற
நிலையிலோ நமக்குக் கட்டளைஇடவில்லை. தன் வாக்கைக் காப்பாற்றுவதன்
பொருட்டு எனக்கு வனவாசமும் உனக்கு நாட்டரசும்கொடுத்தார். நான்
தந்தையின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கையில் நீ மட்டும் அவர்
கட்டளையைமறுக்கலாகுமா?” என்றான். உடனே பரதன், “அப்படியானால்
நானும் தங்களுடன் வனவாசம் செய்துஇலக்குவனைப் போல் தொண்டு
செய்வேன். இல்லையேல் உபவாசம் இருந்து உயிரை விடுவேன்” என்று
கூறித் தருப்பைப் புல்லைப் பரப்பிக் கிழக்குமுகமாக உட்கார்ந்துவிட்டான்.
பரதனின் உறுதியைக்கண்டு பிரமித்த இராமன் வியப்பு மேலிட்டு
அருகிலிருந்த வசிட்டனை நோக்கினார். அவரும்பரதனுக்கு இராமனுடைய
அவதார நோக்கை விவரித்துக் கூறினார். வசிட்டன் கூறியவற்றைக் கேட்ட
பரதன் வானவர் நோக்கத்தை அறிந்து கொண்டாலும் இராமனை நோக்கி,
“வனவாச காலம் முடிந்ததும்அயோத்தி வந்து முடிசூட்டிக் கொள்வதாக
வாக்களிக்க வேண்டும்” என இரந்து பெற்றதும்பொன்னாலாகிய
இரத்தினங்கள் அழுந்தப்பெற்ற பாதுகைகளில் இராமனின் திருவடிகளைப்
பதித்துவாங்கிக்கொண்டு அவற்றின் பிரதிநிதியாய் ஆள்வதாகக் கூறி
அயோத்தி திரும்பினான்.53

மலையாள ராமாயணங்கள்

     கன்னச இராமாயண இராமன், தந்தையைப் பொய்யனாக்கி நரகம்
புகுவித்தல்அவனுடைய மக்களாகிய நமக்கழகாகுமோ? எனவே,
அவராணைப்படி நீ நாடாள்வதும் நான் காட்டில்வாழ்வதுமே நமக்கு
அறமாகும் என்று கூறியதும் வேறு விவாதம் எதுவுமின்றிப் பரதன்
ஒருப்பட்டுபாதுகைகளைப் பெற்று அயோத்தி மீண்டான். எழுத்தச்சன்
ராமாயணம் அத்யாத்மத்தைப்பின்பற்றிச் செல்கிறது.

தொரவெ இராமாயணம்

     குமார வான்மீகியின் படைப்பில், இலக்குவன் பரதன் மீது கொண்ட
சினத்தை மாற்றும் வகையில் இராமன் அவனை நோக்கி,


53. நடேச சாஸ்திரி, பக். 122-125