“தம்பி, சூரியன் மேற்கில் உதித்தாலும் உதிக்கலாம். ஆனாலும், பரதன் நமக்குப் பகையாகமாட்டான். உன் கோபத்தை அடக்கு” என்று அறிவுறுத்த அவனும் அடங்கினான்.இந்நிலையில் பரதன் தம்பியொடும் தாயரொடும் அங்கு வந்து இராமன் காலடியில் வீழ்ந்துவணங்கினான். கண்ணீர் சொரிய நின்ற தாயரைக் கண்ட இராமன் உங்களுடைய ஓலை பாக்கியம் கழிந்ததோ?” என்று வினவித் தந்தையின் மறைவுக்காக அழுது புலம்பினான். ஈமக்கடன்கள்நிறைவேறியதும் பரதன் இராமனை வணங்கித் “தந்தையும் தாயும் நீரே, உடனே அயோத்திக்கு வந்துஅரசை ஏற்றுக் கொண்டு எங்களை மகிழ்வித்தருள்க. இல்லையேல் உன் தம்பியருள் ஒருவன் இல்லாமற்போவான்” என்று கூறினான். வசிட்டன், சுமந்திரன் முதலானோர் பரதன் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியும் இராமன் இணங்கவில்லை. அப்போது கைகேயி கண்ணீர் சொரிந்தவண்ணம் களங்கமற்ற மனத்தினளாய் இராமனைப் பார்த்து, “நான் அறியாமல் செய்த குற்றத்தைமறந்து அரசை ஏற்றுக்கொள் ; நாட்டைக் காப்பாற்று மகனே” என்று வேண்டியவாறே இராமனைத்தழுவிக் கொண்டாள். இராமன் கைகேயியை நோக்கி, “நான் தங்கள் கட்டளையை எப்போதும் மறுத்ததில்லை. ஆனால், இப்போது தங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டால் தம் சொல்லைக்கடந்ததாகத் தந்தையார் வருந்துவார். நம்மரசர் வாய்மையாளர் அல்லவா” என்று பதிலிறுத்தான்.பின்னர்ப் பரதன் இராமனின் பாதுகைகளைப் பெற்று அயோத்தி மீண்டான். (II 6.30) துளசி ராமாயணம் இராமனுக்கும் பரதனுக்கும் இடையில் நடக்கும் விவாதத்தைத் துளசி ராமாயணம் வான்மீகத்தைப் போலவே பெரும்பாலும் கூறுகிறது. இந்திரன், விசுவாமித்திரன், சனகன்முதலானோர் வருகையைத் துளசிதாசர் இவ்விடத்தே குறிப்பிடுகிறார். பரதன் மாயையின் செயலால்அவதார நோக்கமறிந்து இராமனை மேலும் வற்புறுத்தாமல் இராமனின் திருவடித் தலத்தைப்பொற்பாதுகைகளில் பதியப்பெற்று அயோத்தி மீள்கிறான். கம்ப ராமாயணம் பரதனின் சேனையைக் கண்டு இலக்குவன் அடைந்த சீற்றத்தைப் பலவகையானஅறிவுரைகளால் தணித்த இராமன் முடிவாக, என்வயின் நேய நெஞ்சினால்...........தருமத்தின் தேவை செம்மையின் ஆணியை அன்னது நினைக்கல்ஆகுமோ (II 13.44,57) |
|