என்று கூறி ஆற்றுவித்தான். இதற்குள் தன்னை வந்தடைந்து வணங்கிய பரதனைத் தழுவிக்கொண்ட இராமன் பரதனை நோக்கி, ‘ஆளுடை ஐயன் வலியனோ?’ எனத் தந்தையின்நலம் விசாரிக்கிறான். தசரதன் இறப்பினை அறிந்ததும் பலவாறு புலம்பி அழுதுப் பின் தேறிஈமக்கடன்கள் ஆற்றித் துயரத்தே ஆழ்ந்திருந்தான். மறுநாள் பரதனை நோக்கி, “அரசாள்வதை விடுத்துத் தவவேடம் தாங்கி வந்தது ஏன்?” என்று வினவ, உந்தை தீமையும் உலகு உறாத நோய் தந்த தீவினைத் தாய் செய் தீமையும்... நீங்க மீண்டு அரசு செய்க (103) |
என்று பரதன் வேண்டுகிறான். அப்போது இராமன் தாய் பெற்ற வரத்தால் தந்தையிட்ட ஆணையின்படி நான் வனம் நண்ணினேன். நீ அண்ணல் ஏவலின் திறம்பி இங்கு வந்ததுஅறமாகுமா என்று வினவி, வரன் நில் உந்தை சொல் மரபினால் உடைத் தரணி நின்னது என்று இயைந்த தன்மையால் உரனின் நீ பிறந்து உரிமை யாதலால் அரசு நின்னதே ஆள்க (111) |
என்று பணித்தான். அதற்குப் பரதன், முன்னர் வந்து உதித்து, உலகம் மூன்றினும் நின்னை ஒப்பிலா நீ பிறந்த பார் என்னதாகில் யான் இன்று தந்தனன் மன்ன போந்து நீ மகுடன் சூடு (112) |
என மாற்று விடை கூறினான். அதைக் கேட்ட இராமன், அரசு நீ தர என்னதாயினும், நான் ஏற்ற ஆண்டுகள் ஏழினொடு ஏழும் காட்டில் வாழ்ந்து கழிக்காமல் தீருமோ?யானிருக்கவே நீ ஆளலாமா என்று சிந்திக்காதே. மன்னவன் இருக்கும்போதே மகுடன் சூடு என்றஆணையைக் கடக்க அஞ்சி நான் ஏற்றுக்கொள்ளவில்லையா? அதுபோல் நீயும் என் ஆணையை மறுக்காமல்நான் வரும்வரை நாட்டையாண்டுகொண்டிரு என்று முடிவாகக் கூறிப் பரதனை ஒருப்படுத்தான். அப்போதுவசிட்டன், “எனது ஆணையெனக் கருதி, உனக்குரிய நாட்டை வந்து ஆள்வாயாக” என்று கூறியும் இராமன்ஏற்க மறுத்துவிடுகிறான். அந்நிலையில் செய்வது அறியாது வசிட்டன் திகைத்துநிற்க, ‘அன்னதேல்,ஆள்பவர் ஆள்க நாடு. நான் உன்னுடன் வனத்தில் வாழ்வேன்’ என்று கூறி விவாதத்திற்குமாற்றில்லாத முடிவினைக் கூறினான் பரதன். அப்போது தம் செயல் நிறைவேறாத சூழலையுணர்ந்தஇமையவர் |