129

“இராமன் தந்தை சொல் காப்பான். எனவே, அவன் அயோத்தி மீளும்
வரைநாட்டைக் காக்கும் கடமை உடையவன் பரதன்” என்று அசரீரியாகக்
கூறினர். இதனைச் செவியுற்றஇராமன் பரதனை நாடாளுமாறு தெரிவிக்கப்
பரதனும் இசைந்து, இராமனின் திருவடித்தலம் இரண்டையும்பெற்று, ‘நீ
வனவாசம் முடிந்து உரிய நாளில் மீளாவிடின் தீப்பாய்ந்து மாய்வேன். இது
உறுதி’என்று சபதம் செய்து, எம்மையும் தரும் இரண்டையும் தன்
திருமுடித்தலத்திருத்தியவாறே அயோத்திமீண்டான்.

தொகுப்புரை

     தாயும் தந்தையும் விளைவித்த அறச்சிக்கலால் நேர்ந்த தீமையைப்
போக்க அயோத்திக்கு வந்து அரசாளுமாறு இராமனைப் பரதன்
வேண்டுகிறான். தாயும் தந்தையும்அறத்திற்கு முரணாகச் செயல்படவில்லை;
தந்தை வாக்களித்த வரத்தைத் தாய் கேட்க, வாய்மையறம் வழுவாத தந்தை
அவற்றை அவளுக்கு அளிக்கிறார். அதன்படி, தான் காடுறை வாழ்க்கை
பெற்றதாகவும், பரதன் நாடாளும் உரிமை பெற்றதாகவும், அரசன்
ஆணையை ஏற்றுத் தான் நடக்கப்பரதன் அரசன் ஆணையை மறுத்து
அறச்சிக்கலை ஏற்படுத்தியதாகவும் இராமன் அவனுக்குப் பதில்உரைக்கிறான்.

     மூத்தவன் இருக்க இளையவன் அரசாள ஏற்பாடு செய்வதும் அதனை
ஏற்பதும்குலமரபிற்கும் அறத்திற்கும் முரண்பட்டவை என்னும் பரதன்
வாதமும், வசிட்டன் கூற்றும் சாதாரணச்சூழ்நிலையில் ஏற்கத்
தக்கனவாயினும், முன்னரே அளித்த வரங்களால் அம்முறை மாற்றம்
பெறுவதுபெரிய குற்றம் ஆகாது ;  முறைகேடும் ஆகாது என்னும்
இராமனின் வாதம் ஏற்கக் கூடியதாகவிளங்குகிறது. இந்த நோக்கில்
பார்க்குமிடத்துக் கைகேயியின் மீதோ தசரதன்மீதோ குற்றம்ஏற்பட
வழியில்லை. பண்புகளிற் சிறந்து, வீரத்தில் நிறைந்து மக்களன்பில் மீதூர்ந்து
நிற்கும் இராமன் அரசனாகவில்லையே என்ற ஒரு நியாயமான வருத்தம் இச்
சூழலில் எல்லோர்க்கும்ஏற்படுவது இயற்கையே. எனினும், அதற்காக
அறத்தின் ஆணைகளை எதிர்ப்பதோ, ஏற்க மறுப்பதோஅறமாகாது ;
நல்லொழுக்கமும் ஆகாது என்ற இராமனின் வாதத்தை யாரும் மறுக்க
முடியாத சூழல்சித்திரகூடத்தில் நிலவுகிறது.

     கம்பன் படைத்த பரதன், இராமன் வாதத்தை ஏற்றுக்கொண்டு தாயுரை
கொண்டுதாதை உதவிய தரணி தன்னை இராமனுக்கே கொடுத்துவிட்டால்
இராமன் அரசனாவதில் அறச்சிக்கல்ஏதும் விளையாது என்று கருதி,
‘அன்னதாகில் யான் தரக் கொள் நீ’ என்று இராமனுக்குத் தர
முன்வருகிறான். அவ்வாறு அரசை