ஐயத்திற்குரியது. அறிந்திருப்பானேயானால் இராமன் மீண்டு வருவான் என்ற எண்ணத்திற்குஇடமே கொடுத்திருக்கமாட்டான். எனவே, தசரதன் இராமனை முழுவதுமாக அறிந்தான் என்று சொல்வதற்கில்லை.பரதனைப் பற்றியாவது தசரதன் அறிந்திருத்தானா என்றால் அதுவும் இல்லை. பரதனை நன்கு அறியாத காரணத்தால் எல்லாவிதத்திலும் இராமனை ஒத்தவனாகிய பரதனால்தனக்கு நீர்க்கடன்கூட, செய்யப்பட முடியாத ஒரு நிலையை, தசரனே ஏற்படுத்திக் கொண்டு விட்டான். வசிட்டனை நோக்கி, "சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன் மன்னனே ஆவான் வரும் அப் பரதன் தனையும் மகன் என்று உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு" (1654) என்று தசரதன் கூறிவிட்ட காரணத்தால் இறுதியாக நீர்க்கடன் செய்வதற்குக்கூட, பரதனுக்குவாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தசரதனுக்கு நீர்க்கடன் செய்ய பரதனுக்கு வாய்ப்பில்லை என்றுகூறுவதைக் காட்டிலும், பரதன் கையினால் நீர்க்கடன் பெறுகின்ற வாய்ப்பை தசரதன் இழந்துவிட்டான் என்று கூறுவது முற்றிலும் பொருத்தமாகும். ஆகவே, தசரதனுடைய வாழ்க்கை அயோத்தியா காண்டத்தில் முடிந்து விடுகின்றது. ஒப்பற்ற. "தள்ள அரிய பெரு நீதித் தனி ஆறு புக மண்டும் பள்ளம் எனும் தகையான்" (657) ஆன பரதனை தசரதன் நன்கு அறியாத காரணத்தால் "நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்" (2332) என்ற இராமனுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவன் என்று கூற முடியாத அளவிற்கு, இராமனோடுசமநிலையுடையவனாகிய பரதன் கையினால் நீர்க்கடன் கூடப் பெற முடியாத நிலையைத்தசரதன் அடைந்தான்என்றால் இந்தப் பாத்திரப் படைப்பின் அமைப்பில் கம்பன் சில உத்திகளைக் கையாளுகின்றான். எல்லை மீறிய பாசம் என்பது யாரிடத்தில் வைக்கப்பட்டாலும் அது இறுதியில் பெருந்துன்பத்தைத்தரும், என்பதற்குத் தசரதனையே எடுத்துக்காட்டாக அமைத்துவிடுகின்றான். மூலநூலிலுள்ள கன்யா சுல்கக் கதையை மறைத்து விட்டானாயினும் முழுவதுமாக மறைக்க முடியவில்லைகம்பனால். ஆகவே, வேறு வழியே இல்லாத நிலையில் தசரதன் வரம் |