கொடுக்க ஒத்துக்கொண்டான் என்று கதையைக் கொண்டு சென்றான் கம்பன். இனி வசிட்டன் முக்காலத்தையும் உணர்ந்தவனாயிற்றே, அப்படியிருக்க கைகேயி செய்த இந்தக்காரியத்திற்காக ஏன் அவளை ஏசினான்? என்று ஒரு சிலருடைய மனத்தில் ஐயம் எழலாம். வசிட்டனைப்பொறுத்தமட்டில் இதுதான் நடைபெற வேண்டியது என்பதை நன்கு அறிந்தவன். ஆதலால், கைகேயியைஅவன் குறை கூறுவதற்கு இடமே இல்லை. என்றாலும், தன்னுடைய முக்கிய சீடனாகிய தசரதன் படும் பாட்டைப் பார்த்து, எவ்வாறாயினும் அவனுடைய துயரத்தைப் போக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில்வசிட்டன் கைகேயியிடம் கேட்கின்றான், ‘நீ இந்த வரத்தைத் திருப்பித் தந்துவிடு’ என்று. உறுதியாகக் கைகேயி மறுத்துவிட்டாள். ஆகவே, அவளை ஒரு வகையாகப் பார்த்துவிட்டு வசிட்டனும் நீங்கி விடுகின்றான் என்று கதையை அமைத்துச் செல்கிறான் கவிச்சக்கரவர்த்தி. இந்தக் காண்டத்தின் முற்பகுதியில் மந்தரை வருகின்றாள். மாபெரும் சூழ்ச்சி செய்கின்றாள். அதோடு மறைந்து விடுகின்றாள். கதைத் தலைவனாகிய இராமனைப் பெற்ற தசரதன் நான்கு பிள்ளைகளைப்பெற்றும், அவனால் விரும்பப்பட்ட இராமனாலோ அல்லது இராமனையே ஒத்த பரதனாலோ நீர்க்கடன் செய்யப்பெறமுடியாத நிலையில் பரிதாபமாக உயிரை விட்டுவிடுகின்றான். ஆகவே, இந்த இரண்டு பாத்திரங்களும்போக எஞ்சி இருப்பவை கைகேயி, கங்கைத் தலைவனாகிய குகன், பரதன் ஆகிய மூவருமேயாவர். கைகேயி என்ற பாத்திரத்தை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது பொருத்தமாகும் என்றுநினைக்கின்றேன். இது வரையில் கைகேயியைப் பெருங் கொடுமைக்காரியாக, கருணையற்றவளாக, பண்பற்றவளாகவே கண்டோம். தான் கொண்ட கருத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகக் கணவனைஇழப்பதைக்கூடப் பெரிதாகக் கருதவில்லை என்று தான் கூறிக் கொண்டிருந்தோம். ஆனால், கம்பனுடைய பாத்திரப் படைப்பை ஆழ்ந்து சிந்திக்கும்பொழுது கைகேயியை அவன் வேறு வகையில் அமைத்தானோஎன்று நினைக்கத் தோன்றுகிறது. இராமன் எப்படி ஸ்திரிப்ரக்ஞனாக அமைக்கப்படுகின்றானோஅதுபோல் ஒரு ஸ்திதப்ரக்ஞ மனோ நிலையுடையவளாகக் கைகேயியும் படைக்கப்பட்டிருக்கின்றாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நன்மை எது, தீமை எது என்பதை நன்கு அறிந்துகொண்டாள் கைகேயி. கூனியினுடைய சூழ்ச்சி,அவள் அந்த அடிப்படையை |