ஆகவே, வேறு ஏதோ ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காரணத்தைத் தன் அடிமனத்தில்வைத்துக்கொண்டு, அதனை வெளியில் சொல்ல முடியாத நிலையில், தன்னுடைய கணவனாகிய தசரதனைப்பெருங் குற்றத்திலிருந்து காப்பாற்ற வேண்டுமென்று நினைக்கின்றாள் கைகேயி என்று நினைப்பதுபொருத்தமுடையதோ என்று தோன்றுகிறது. இராமனது அவதார நோக்கத்தை அவள் அறிந்திருந்தாள் என்று சொல்வதற்கில்லை. ‘இராகவன்காட்டிற்கு செல்வதுதான் அவன் பிறந்ததனுடைய நோக்கம்’. என்பதைக் கைகேயி அறிந்திருந்தாள்என்று சொல்வதற்கில்லை. ‘இராகவன் காட்டிற்கு செல்வதுதான் அவன் பிறந்ததனுடைய நோக்கம்’. என்பதைக் கைகேயி அறிந்திருந்தாள் என்று சொல்வது கதைப் போக்கில் இடையூறுவிளைவிக்கும். ஆகவே, அந்தக் கருத்தை விட்டு விடலாம். அவளைப் பொறுத்தமட்டில் தசரதன் தன்னுடைய திருமணத்திற்கு முன்னால் கொடுத்த வாக்கைமீறி (கன்யா கல்கம்) இப்பொழுது அதற்கு மாறுபட்ட ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குகிறான். இதனைச் செய்து முடிப்பானேயானால் உலகமுள்ளவும் தசரதனுடைய பெயர் பெரும் பழிக்கு உள்ளாகும். அது மட்டுமல்ல, பெரும் பாவத்திற்கும் அவன் ஆளாவான், பரம் பொருளை மகனாகப் பெற்றுங்கூட இத்தகைய குற்றத்திலிருந்து அவன் விடுபட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கும். ஆகவே, இப்பொழுது ஒன்று, தசரதனை அவனுடைய வழிப்படி விட்டு அதனால் வருகின்ற பெருங்குற்றத்தினையும், பழி பாவங்களையும் அவனே ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். இல்லையானால்அவன் செய்ய முனைந்த காரியத்தைச் செய்யவிடாமல் தடுத்து அதனால் வருகின்ற பழி பாவங்கள், குற்றங்கள், கெட்ட பெயர் அனைத்தையும் கைகேயி தானே ஏற்றுக்கொண்டு, தசரதனைக் காப்பாற்றவேண்டும். இந்த இரண்டின் இடைப்பட்டு, ‘இருதலைக் கொள்ளி எறும்பாக’ இருந்த கைகேயி, ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வருகின்றாள் என்று நினைக்க வேண்டியுள்ளது. மந்தரை சொல்லிவிட்டுப் போனபிறகு தசரதன் வருவதற்கு இடைப்பட்ட நேரத்தில் கைகேயினுடையமனத்திரையில் இந்த எண்ண ஓட்டங்கள் நன்கு பதிந்திருக்க வேண்டும். எவ்வாறாவது தன்கணவனைக் காப்பாற்ற வேண்டும். ‘வாய்மையும் மரபும் காத்தவனாக’ அவனை ஆக்க வேண்டும். ‘பொய்உரையாத புண்ணியனாக’ அவனை ஆக்க வேண்டும் என்று கைகேயி முடிவுக்கு வந்துவிட்டாள். கற்புடைய மனைவியின் கடமை அது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ‘தற்காத்துத் தற்கொண்டானை’ப் பேண வேண்டிய கடப்பாடு அவளுடையதாக ஆகிறது. |