ஆகவே, தான் எந்த நிலையை அடைந்தாலும், தனக்கு எத்தகைய அவப்பெயர் வந்தாலும், தான்எந்தப் பாவத்திற்குப் போவதாக இருந்தாலும் அது பற்றிக் கவலைப்படாமல், தன்னைக் கைப்பிடித்தவனாகியகணவனுடைய குற்றங்களை நீக்கி, அவனுக்குப் பழி வராமல் செய்து அவன் நரகத்தை அடையாமல் செய்யவேண்டியது தன்னுடைய கடமை என்று கைகேயி முடிவு செய்திருத்தல் வேண்டும். இந்த முடிவை அவன் மேற்கொண்ட பிறகு, அந்த முடிவைக் கொண்டுசெலுத்துகின்ற முறையில் அவள்ஒப்பற்ற சிதப்ரக்ஞ நிலையில் நின்று செயலாற்றுகின்றாள். இவ்வாறு செய்வதனால் கணவன் உயிர் போய்விடும் என்று முதலில் அவள் நினையாமல் இருந்திருக்கலாம். ஆனால், கணவன் அதை எடுத்துக்காட்டிய பிறகு, ‘கணவனுடைய உயிரா? அல்லது அவன் பழிக்கு ஆளாகாமல் இருப்பதா?’ என்ற ஒருவினா கைகேயியின் மனத்தில் தோன்றியிருத்தல் வேண்டும். தசரதன் அறுபதினாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவன். இன்னும் சில ஆண்டுகள் வாழ்வதில் அவனுக்குஎந்த விதமான சிறப்பும், பெருமையும் இருக்கப் போதில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தும், அவன் இராமனுக்குப் பட்டம் கட்டிவிட்டு உயிர் துறப்பானேயானால் வார்த்தை தவறிய பெரும் பழிஅவனைச் சூழத்தான் செய்யும். ஆகவே, இந்தப் பழியிலிருந்து நீங்க வேண்டுமானால், அவன் உயிர்போவதாக இருந்தாலும் சரி அதைப் பற்றிக் கவலையில்லை. இந்தப் பழி பாவங்கள் அவனை அடையாதிருத்தல்வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கைகேயி செயல்பட்டாள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. ஆகையினால்தான் தசரதன் எவ்வளவு எடுத்துக் கூறியும் வசிட்டன் வந்து கூறியும், கோசலை வந்துஅழுதும் கைகேயி எதற்கம் அசையாமல், தான் கொண்ட கொள்கையில் உறுதிப்பாட்டோடு நின்று விட்டாள். ஆகவே, இந்த அடிப்படையை வைத்துக்கொண்டு பார்ப்போமேயானால் கைகேயி செய்த தியாகம்மாபெரும் தியாகமாகும். இந்த மாபெரும் தியாகத்தில் தன்னைச் சூடமாக ஆக்கி எரித்துக்கொண்டுகணவனைக் காப்பாற்றுகின்றாள் என்று நினைக்கத் தோன்றுகிறது. கைகேயி இவ்வாறு நினைந்துதான், ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு இந்த முடிவிற்கு வந்துகணவனைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே சர்வ பரித்தியாகம் செய்துகொண்டாள் என்ற முடிவுக்குஅரண் செய்கின்ற முறையில் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் அமைகின்றன. |