26

பொழுதுதான் அவளுடைய பெருமை நமக்குத் தெற்றென விளங்குகிறது.

     இதனை அவள் சொல்லியிருப்பாளேயானால் தன் பழியிலிருந்து 
விலகிக்கொள்ளலாமே  தவிர, தசரதனுடைய புகழ் மங்கியிருக்கும். அந்த
நிலை வரக்கூடாது  என்பதற்காகத்தான் கைகேயி இவ்வளவுபெரிய
தியாகத்தைச் செய்தாள். ஆகவே,  வாய் திறந்து,  ‘வேண்டுமென்றே தான்
செய்தேன். இதனை நான் செய்யாமல்  இருந்திருப்பேனேயானால் தசரதன்
வாய்மையும்,  மரபும்  காத்தவனாகஇருந்திருக்க மாட்டான்’  என்று
சொல்லியிருப்பாளேயானால் மறுபடியும் தசரதனுக்குப் பழி ஏற்பட
வழிசெய்தவள் ஆகிவிடுவாள்.  ஆகவே,  ஒரு கடுகளவு கூடக் கணவனுக்குப்
பழிவராத முறையில் அவனைப்பாதுகாத்து அதன் காரணமாகத் தன்னையே
தியாகம் செய்து கொண்டு வாய் திறவாமல் கடைசிவரை இருந்தபாத்திரமாக
அமைகின்றாள் கைகேயி. இவளுடைய  இந்த மாபெரும் தியாகத்தைப் பரதன்
உணர்ச்சிவசப்பட்ட காரணத்தால் அறிந்துகொள்ளவில்லை.  ஏனையோரைப்
பற்றிக் கவலையே யில்லை. ஆனால்,இராகவனைப் பொறுத்தமட்டில் நன்கு
அறிந்து இருந்தான் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.

     இராகவனைப் பிள்ளையாகப் பெற்றுங்கூட,  தசரதன் வீடு பேற்றை
அடையக்கூடிய நிலையைப் பெறவில்லை.தேவர் உலகத்தில்தான் சென்று
தங்குகின்றான்.  இராகவன் கானகம்

     "போயினன் என்றான்:  என்ற போழ்தத்தே ஆவி போனான்"
                                                         (1898)

என்றுதான் கம்பன் கூறுகின்றானே தவிர, ‘வீடுபேற்றை அடைந்தான்’ என்று
சொல்லவில்லை.ஏன் தெரியுமா? மனத்திலே  கைகேயி  மாட்டுக் கொண்ட
காழ்ப்புணர்ச்சியோடு  இறுதி வரையிலும்தசரதன் இருந்துவிட்டான்.
கைகேயிமாட்டுக்கொண்ட காழ்ப்புணர்ச்சியும்,  பரதன்மாட்டுக் கொண்ட 
கசப்புணர்ச்சியும் அவனுடைய மனத்தில் நிறைந்திருந்த காரணத்தால்தான்
அவன் வீடுபேற்றை அடைதல்முடியவில்லை.  ஆகவே,  இந்தக்
காழ்ப்புணர்ச்சி அவனிடமிருந்து  நீங்கினாலொழிய அவன் வீடுபேற்றை
அடைய முடியாது என்ற இந்த நாட்டுக் கொள்கையை வலியுறுத்துவதற்காக, 
மூல  நூலில் இல்லாத ஒரு பகுதியைப்புகுத்துகிறான் கவிச்சக்கரவர்த்தி
கம்பநாடன். அனைத்தும் முடிந்து வெற்றிவாகை சூடிய இராமனிடம்தசரதன்
வருவதாக ஒரு புதிய காட்சியை உண்டாக்குகின்றான். தசரதன் வந்து,