28

இருந்துவிட்ட ஒரே காரணத்தால்  இறுதி வரையில் தன்னுடைய கணவனை 
மாசு மருவு அற்றவனாகஆக்க வேண்டுமென்ற தன்னுடைய குறிக்கோளில் 
வெற்றி பெற்றவளாக ஆகி விடுகின்றாள் கைகேயி.ஆகவேதான், ஏனையோர்
யாருக்கும் தராத அந்தப் பட்டத்தை, இராகவன் கூற்றாகவே அமைக்கின்றான்
கவிச்சக்கரவர்த்தி

     "என் தெய்வம்"

என்று.

     ஆகவே,  கைகேயி என்ற பாத்திரப் படைப்பை எந்த அளவுக்குக்
கவிஞன் புதிய முறையிலே படைத்திருக்கின்றான் என்பதை இந்தக்
கண்ணோட்டத்துடன் பார்ப்போமேயானால் கொஞ்சம் வியப்பைத்
தருவதாகவே அமைகின்றது.  மூல நூலில் அமைந்துள்ள முறையை
விட்டுவிட்டுப் புதிய முறையில் கன்யாசுல்கத்தை ஓரளவு மறைத்து, அதே
நேரத்தில் கைகேயியை ஒரு மாபெரும் தியாகியாக,  ஸ்த்தப்ரக்ஞையாக, 
கடமையை நிறைவேற்றுவதற்காகப் பழி பாவங்களை ஏற்றுக் கொள்ளுகின்ற
ஒரு பாத்திரமாக அமைத்துவிடுகின்றான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன்.

     ஆகவே,  ‘இந்த அடிப்படையில்தான் அந்தப் பாத்திரத்தை
அமைக்கின்றேன்’ என்பதைச்சுட்டிக் காட்டுபவன் போல,  அப்பாத்திரத்தை
அறிமுகம் செய்கின்றபோதே மிக அற்புதமான முறையில்அறிமுகம்  செய்து
கைக்கின்றான். மந்தரை வந்த பொழுது கைகேயி  உறங்கிக்கொண்டிருக்கிறாள்.

     "கடைக்கண் அளி பொழிய பொங்கு அணை
    மேல் கிடந்தாள்"                                 (1448)

என்று கைகேயியை முதன் முதலாக அறிமுகம்  செய்வான் கம்பநாடன். 
உறங்கும்பொழுது ஒருவருடைய அக மனத்தில் என்ன எண்ணம் 
நிறைந்திருக்கிறதோ அதுதான் அவரது  முகத்தில் வெளிப்படும்.  கைகேயி
உறங்கிக்கொண்டிருந்தபோது  அவள் கடைக்கண்  வழி அருள் சுரந்து 
கொண்டிருந்தது  என்றால்அவளுடைய அகமனம், ஆழ்மனம்,  சிந்தை
ஆகிய அனைத்திலும் அருள் நிரம்பி இருக்கின்றது  என்பதைச்சொல்லாமல்
சொல்லுகின்றான் கவிச்சக்கரவர்த்தி.  இப்படி மனம்,  புத்தி,  சித்தம், 
அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் நான்கிலும் அருள்
நிறைந்திருப்பவளாகிய ஒருத்தி,  எவ்வாறு  கொடுமையானகாரியத்தைச்
செய்ய முடியும் என்று சிந்திப்போமேயானால் உண்மையை விளங்கிக்கொள்ள
முடியும்.கொடுமை என்பது நாம் பார்க்கும் பார்வையில் இருக்கின்றதே தவிர,
செயலில் இல்லை.  இப்பொழுதுஅவள் வாய் திறவாமல்
இருந்திருப்பாளேயானால்