30

லாம் மிகப் பெரிதாக ஒரு முன்னுரை  பேசிவிட்டு,  ‘இந்தப் பட்டத்தை
ஏற்றுக்கொள்’  என்றுசொல்லுகிறான் தசரதன்.

     இவ்வாறு சொல்வதற்குத் தேவை என்ன ஏற்பட்டது?

     இராகவன் தன் வேண்டுகோளை ஒருவேளை மறுத்துவிடுவானோ என்ற
அச்சத்தினால்தான் தசரதன் இவ்வளவுபெரிய முன்னுரை பேசுகிறான். 
அப்படியும் அச்சம் நீங்காமல் இறுதியாக,

     இந்தப் பதினான்கு பாடல்களில்,  ‘மைந்தர்கள் என்பவர்கள்
தந்தைமார்கள் என்ன ஆணையிடுகின்றார்களோஅதைச் செய்ய வேண்டிய
கடப்பாடு உடையவர்கள்’ என்று கூறுவதோடு "நான் இவ்வளவு காலம்
வானப்பிரஸ்தம்செல்லாமல் இல்லறத்தில் தங்கிவிட்டது பெருந்தவறு.
ஐந்து  பொறி புலன்களை அடக்கியாள வேண்டியதவ வாழ்க்கையை
மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய காலம் இப்போது வந்துவிட்டது"
என்றெல்லாம்விரிவாகப்பேசி, இறுதியாக,

     "அருந் துயர்ப் பெரும் பரம், அரசன்
    வினையின் என்வயின் வைத்தனன்" எனக்கொள வேண்டா;
    புனையும்  மா முடி புனைந்து,  இந்த நல் அறம் புரக்க
    நினையல் வேண்டும்;  யான் நின்வயின் பெறுவது  ஈது
    (1381)

என்று சொல்லுகின்றான் தசரதன்.  இந்த வார்த்தைகள் ஆழ்ந்து நோக்கற்
குரியன.

     மைந்தனை அழைத்து,

     "நின்னை வேண்டி,  எய்திட விழைவது ஒன்று  உளது"    (1373)

எனவும்,

     "ஓர் நெறிபுக உதவிட வேண்டும்"                       (1374)

எனவும் கெஞ்சி,  ‘நான் வானப்பிரஸ்தம் செல்ல  வேண்டும்,  நீ பட்டத்தை
ஏற்றுக்கொள்’

     "யான் நின்வயின் பெறுவது ஈது"                        (1381)

என்று கேட்க வேண்டிய தேவை என்ன வந்தது? ஆகவேதான் இதில்
ஆழமான பொருள் ஏதோ புதைந்திருக்கவேண்டும்.

     "இராகவன் கன்யா சுல்க அடிப்படையை அறிந்திருந்தான். எனவே,
ராஜ்யத்தை மறுத்துவிடுவான்"என அஞ்சிய தசரதன்., அவன் மறுப்பதற்கு
வாய்திறக்கும் முன்னரே இதை வரமாகக் கேட்கின்றான்.