33

     ‘அப்பணி தலைநின்றான்’                              (1382)

அவன் இட்ட பணியை மேற்கொண்டான்’ என்று  பேசுவதனால் இந்தக்
கன்யா கதை எந்த அடிப்படையில்இராகவனுடைய மனத்தில் வேலை
செய்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.

     இதற்கு இதுதான் பொருள் என்று அரண் செய்கின்ற முறையில் பின்னர்
இராகவனுடைய கூற்றுஅமைந்திருத்தல்  காண்டல் கூடும்.  சித்திரகூடத்தில்
இராகவன் தங்கியிருக்கிறான்.  அவனைஅழைத்துப் போவதற்காகப்
படைகளோடும், நகர மக்களோடும் வந்த பரதன்,  நிமிர்ந்த சேனையைப்
பின்வருக என்று கூறி அவர்களை நிறுத்துவிட்டு,  முன்னே தனியாக வந்து
இராகவனை வணங்குகிறான்.

     பரதனுடைய மாசு படிந்த மேனியையும்,  தவக்கோலத்தையும்  பார்த்து
அசந்துபோனவனாகிய இராகவன்,அவனிடம் பல கேள்விகளைக் கேட்டு, 
தந்தையினுடைய இறப்பு  முதலானவற்றையெல்லாம் தெரிந்துவருந்திய பிறகு,
‘நீ வந்து ஆட்சியை மேற்கொள்ள வேண்டும்’  என்று பரதன் கூற அதற்கு
இராகவன்கூறுவதாக உள்ள பாடல் ஆழ்ந்து சிந்திப்பதற்குரிய தாகும்.

     ‘வரன் நில் உந்தை சொல் மரபினால் உடைத்தரணி நின்னது என்று 
இயைந்த தன்மையால் உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் அரசு
நின்னதே ஆள்க  (கம்பன் 2485)  என அந்தப் பாடலில்சொல்கிறான்
இராகவன். ‘நீ பிறந்து விட்டதனாலே இந்த ராஜ்யம் உன்னுடையது  ஆகிறது’
என்று இராகவன்பேசுகிறான் என்றால் என்ன பொருள்.? கன்யா சுல்கக்
கதையை வேறு முகமாக, வேறு விதமாக இங்கேபுகுத்துகிறான்
கவிச்சக்கரவர்த்தி.  அதை  நன்கு அறிந்திருந்தவனாகிய இராகவன்
பேசுகின்றான்.

     "பரதா,  நீ பிறவாமல்  இருந்திருந்தால்  இந்த ராஜ்யம்  எனக்கு
உரியதாக இருந்திருக்கலாம்.ஆனால், கைகேயியின் வயிற்றில் நீ பிறந்துவிட்ட
காரணத்தால்  இந்தப் பூமி உனக்குச் சொந்தமாகஆகிவிட்டது. அதனை
நீயே ஆள்வாயக’

     "நீ பிறந்து  உரிமை ஆதலால்
    அரசு நின்னதே ஆள்க"
                                (2485)

என்று இராகவன் கூறியதாக மிக அற்புதமான முறையில் அந்தக் கதையை
மறுபடியும் நினைவூட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி.இத்