34

தகைய ஒரு பாடலைக் கம்பன் மூல நூலாகிய வான்மீகத்தை நினைவில் 
கொண்டு பாடுகிறான். வான்மீகத்தில்இதே இடத்தில் கன்யா சுல்க வரலாற்றை 
மிக விரிவாகப் பரதனுக்கு  இராகவன் எடுத்துக் கூறுவதாகப்பல பாடல்கள்
அமைந்துள்ளன.  வான்மீகம்,  அயோத்தியா காண்டம்.

     தசரத குமாரன் அவ்வாறு பேசியவுடன்  ‘அது எப்படி?’ என்று பரதன்
கேட்டதாக இல்லவே இல்லை.அதற்குப் பதிலாக  ‘நீ பிறந்துவிட்ட
காரணத்தால்  இந்த அரசு உனக்குச் சொந்த மானது’  என்றுஇராகவன்
சொன்னதை ஏற்றுக்கொள்கிறான் பரதன்.  அது  தான் ஆச்சரியம்.  முன்னர் 
வந்து உதித்து  உலகம்  மூன்றிலும் நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார்
என்னது ஆகில் யான் இன்று தந்தனென்மன்ன!  போந்து  நீ மகுடம்  சூடு
(2486).  இராகவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு,  "நான் அரசன்தான். 
இப்போது நான் ஆணையிடுகின்றேன். நீ போய் ராஜ்யத்தை  ஆள்வாயாக"
என்று பரதன் கூறும்போது இராமன்,  பரதன் ஆகிய இருவருமே  இந்தக்
கன்யா சுல்கக் கதையை ஏற்றுக்கொண்டு அதற்கு வழி செய்கின்றார்கள்
என்பதை அறிய முடிகின்றது. இப்படி வெளிப்படையாகச் சொல்லாமல்
அதனை யார் யார் அறிந்திருக்கவேண்டுமோ அவர்கள் எல்லாம்
அறிந்திருந்தார்கள் என்று குறிப்பாகக் கவிச்சக்கரவர்த்திகதையைக் கொண்டு
செல்லுகின்ற முறையில் பற்பல வெற்றிகளைப் பெற்றுவிட்டான் என்று தான்
சொல்லவேண்டும்.  தசரதனைப் பழிக்கு ஆளாக்காமல், ‘வாய்மையும் மரபும்
காத்த மன்னுயிர் துறந்தவனாகச் செய்து விட்டாள் கைகேயி.

     "படர் எலாம் படைத்தாளை பழி வளர்க்கும் செவிலியை"  (2371)

என்று பரதன் கூறினாலும்  உண்மையில் அத்தகையவள் அல்லள் அவள். 
மாபெருந்  தியாகத்தைச் செய்தஸ்திதப்பிரக்ஞ மனோ நிலையில் உள்ள
ஞானியாக அவளை ஆக்கிப் படைத்துவிட்டான்.  ஆகவே,  அந்த
அடிப்படையில் அவள் மனமாற்றத்தைக் குறிக்க வந்த கவிஞன்,

     "அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
    துரக்க நல் அருள் துறந்தனள் தூமொழி மடமான்"        (1484)

என்று மட்டும் கூறி நிறுத்தாமல்

     "தூமொழி மடமான்"                                   (1484)