52

     தன்னால் வரவழைக்கப்பட்ட அரசர்,  அமைச்சர்,  அந்தணர்
முதலானோரை  நோக்கி,  "என்வாழ் நாள்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக
அரசைப் புரந்து வந்த காரணத்தால் என் உடல் மூப்புற்றுஇயலாமை
உண்டாகியிருப்பதை உணர்கிறேன்.  எனவே, என் மூத்த மகன் இராமனை
இளவரசன் ஆக்கிவிட்டுஓய்வு பெற விரும்புகிறேன்" என்று தசரதன் தன்
உள்ளக் கருத்தை வெளியிட்டான்.                  (II. 2.7,  8, 10)

இரகுவம்சம்

     தன் காதருகே தோன்றிய நரையைக் கவனித்த தசரதன் தனக்கு மூப்பு
வந்துற்றது என உணர்ந்துஉடனே இராமனுக்கு முடிசூட்ட விரும்புகிறான்.1

கம்ப ராமாயணம்

     "அறுபதாயிரம் ஆண்டுகள் இந்நாட்டை  உங்கள் உதவியால் ஆண்ட
நான் மூப்புப் பருவம் அடைந்துவிட்டேன்.நிரம்ப மூப்படைந்த பின்னரும்
நானே அரசாள்வது  பொருந்துமா"  என்று அவையோரிடமும்  (II.1.13,15,27),
"ஐய, அரும்பெரு மூப்பும் மெய்யது ஆயது,  இனி மாநிலச் சுமையுறு சிறை
துறந்து யான்உய்யலாவதோர் நெறிபுக உதவிட வேண்டும்"  (II. 1.61) என்று
இராமனிடமும் தான் மூப்புற்றுத்தளர்ந்தமை கூறி இராமனுக்கு முடிசூட்டி
ஓய்வுபெற விரும்புவதாகத் தசரதன் கூறுகிறான்.

அத்யாத்ம ராமாயணம்

     இராம சர்மாவின் அத்யாத்ம ராமாயணத்தின்படி அறுபதினாயிரம்
ஆண்டுகள் ஆட்சி செய்து அதனால்தான்மிகவும் களைத்துவிட்டதாகவும், 
மிக்க முதுமையடைந்த காரணத்தால் இராமனுக்கு முடி சூட்டி அரசை
அவனிடம்ஒப்புவிக்க விரும்புவதாகவும் தசரதன் வசிட்டனிடம் கூறுகிறான்.2


1.   ???
2.    நடேச சாஸ்திரியார், (மொ.பெ) ஸ்ரீமத் அத்யாத்ம ராமாயணம்
     சென்னை:  பாலாஜி அண்டு கம்பெனி,இரண்டாம் பதிப்பு 1914, 
     பக். 52 - 53.