தெலுகுரங்கநாத ராமாயணமும் கன்னடதொரவே ராமாயணமும், மலையாளகன்னச ராமாயணமும், எழுத்தச்சன் இராமாயணமும், இராம்கியேன் என்னும் தாய்லாந்துராமாயணமும் தசரதன் தான் மூப்பு அடைந்ததை உணர்ந்து இராமனுக்கு முடி சூட்டக் கருதினான் என்று கூறுகின்றன. துளசி ராமாயணம் அரசன் மூப்படைந்த செய்தியை அவன் காதருகே வந்து குறிப்பின் உணர்த்திய கன்னமூல நரை, "அரசே,விரைவில் இராமனுக்கு முடிசூட்டி இப்பிறவியின் பயனை அடைவாயாக" என்று தசரதனுக்கு அறிவுறுத்தியதாகத் துளசிதாசரின் இராம சரித மானசம் கூறுகிறது. (II 2.7, 8) 1.1.2. தசரதனின் கனவும் கிரக நிலையும் வான்மீகி ராமாயணம் மட்டும் தசரதனின் கிரகநிலை பற்றியும், அவன் கண்ட தீக்கனா பற்றியும்இராமனிடம் கூறுவதாகக் குறிப்பிடுகிறது.: இராம, ஆகாயத்திலிருந்து கொள்ளிக் கட்டையொன்று இடியோசையுடன் வீழ்வதாகக் கனவு கண்டேன்.மேலும் எனது ஜன்ம நட்சத்திரத்தில் சூரியன், செவ்வாய், இராகு என்னும் மூன்று கிரகங்களும் ஒருங்கு வந்து கூடியிருப்பதாகச் சோதிடர்கள் கூறுகின்றனர். இவற்றின் காரணமாய் அரசனுக்கு மரணம்நேரலாம்; அல்லது அவனுக்கு மிகப் பெரிய தீங்கு உண்டாகலாம் என்பது சோதிட நூற் கொள்கை. மேலும் மனிதர்களின் எண்ணங்கள் நிலையானவை அல்ல. ஆகையால், எனக்கு இறுதி நேர்வதற்கு முன்னரே, என் மனம் உறுதியாக இருக்கும்பொழுதே உனக்கு முடிசூட்டி மகிழ விரும்புகிறேன். (II4.17-20) 1.1.3. தசரதன் துறவு மேற்கொள்ள விரும்புதல் கம்ப ராமாயணம் உயிர்க்கு உறுதி பயக்கும் துறவற நெறியை மேற்கொள்ள விரும்புவதாக வான்மீகம் கூறுவில்லை.கம்பன் படைத்த தசரதன் இக்கருத்துடையவனாக இருந்தான் என்பதை, மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன் என்னுயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன். (II.1.14) |