54

    துறப்பெனும் தெப்பமே துணைசெய் யாவிடின்
    பிறப்பெனும் பெருங்கடல் பிழைக்கல் ஆகுமோ?         (1.20)

    இம்மையின் உதவிநல் இசைந டாயநீர்
    அம்மையும் உதவுதற்கு அமைய வேண்டுமால்
            (1.23)

      .......இராமன் தாதைதான்
    அறம்தலை நிரம்ப மூப்பு அடைந்த பின்னரும்
    துறந்திலன் என்பதோர் சொல்லுண் டானபின்
    பிறந்திலன் என்பதின் பிறிதுண்டாகுமோ?
               (1.27)

    ஆதலால் இராமனுக்கு அரசை நல்கியிப்
    பேதைமைத் தாய்வரும் பிறப்பை நீக்குறு
    மாதவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன்
    யாதுநும் கருத்து?.....                          
     (1.30)

என வரும் கம்ப ராமாயணப் பாடல்கள் விளக்குகின்றன.

அத்யாத்ம ராமாயணம்

     "உலகத்தில் புகழுக்குரிய காரியத்தைச் செய்தேனேயல்லாது, 
ஆத்மலாபமான காரியத்தை நான்செய்யவில்லை... ஆகையால், ஸ்ரீராமனுக்கு
இராஜ்ய பட்டாபிஷேகம் செய்து இராஜாங்க காரியத்தைஅவனிடம்
ஒப்புவித்துவிட்டு,  நான் இனி மேலாவது,  ஆத்மார்த்தமான புண்ணிய
கருமங்களைச் செய்யவிரும்புகிறேன்", என்று தசரதன் வசிட்டனிடம்
கூறுவதாக அத்யாத்ம ராமாயணம் காட்டுகிறது. (பக்.52- 53).

தொகுப்புரை

     தசரதன் இராமனுக்கு முடிசூட்டவேண்டும் என்று
முடிவெடுத்தமை அயோத்தியா காண்டக் கதைப் பின்னலின்முதல்
முக்கியமான நிகழ்ச்சியாக அமைகிறது.  தசரதன் இம்முடிவுக்கு
வந்தமைக்கு மூப்படைந்தமை,  கிரக நிலை,  துறவறத்தின்மேல்
விருப்பு என்னும் மூன்றுவகைக் காரணங்கள் கூறப்படுகின்றன.

முதுமை

     தான் முதுமையுற்றதைத் தசரதன் உணர்ந்து அவையோர்க்கு
அதனை எடுத்துக் கூறுவதாக வான்மீகம்முதலான பெரும்பாலான
இராமாயண நூல்கள் கூறுகின்றன.  தெலுகு  இராமாயணங்களான
பாஸ்கர ராமாயணமும், மொல்ல ராமாயணமும் இதுபற்றிக் குறிப்