55

பிடாமல் நீண்டகாலம் அரசாண்டு மனநிறைவடைந்த காரணத்தால் இராமனை
அரசனாக்கத் தசரதன்விரும்பினான் என்று குறிப்பிடுகின்றன.

     தான் முதுமையுற்றதைத் தசரதன் எவ்வாறு உணர்ந்தான் என
வான்மீகம் விதந்து கூறவில்லை; பல்லாயிரம்ஆண்டுகளாகத் தான்
அரசாண்டு களைத்துப் போனதாகத் தசரதன் கூறுகிறான்.  அத்யாத்மமும்
அறுபதாயிரம்ஆண்டுகள் அரசாண்டு அதனால் தசரதன் மிகவும்
களைத்துவிட்டதாகக் கூறுகிறது. இருபதினாயிரம் ஆண்டுகள்இந்நிலவுலகை
யாண்டு முதுமை யெய்தி விட்டதாக ரங்கநாத ராமாயணம் கூறுகிறது.
இவ்வாறு ஆண்டுகளின்எண்ணிக்கை கொண்டு நெடுங்காலம் சென்றமையால்
அரசன் முதுமை எய்தினான் என்னும் கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

     தன் காதருகே தோன்றிய நரையின் மூலம் தான் மூப்புற்றமையைத்
தரசதன் அறிந்தான் என்றுஇரகுவம்சம் கூறுகிறது.  இதே கருத்தைத் துளசி
ராமாயணமும் கூறுகிறது. காளிதாசனைப்  பின் பற்றித் துளசிதாசர் இவ்வாறு
கூறி இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.3

     கன்னமூல நரையின் தோற்றத்தால் தான் முதுமையுற்றமையைத் தசரதன்
உணர்ந்ததாகக் கூறும்இரண்டு பாடல்கள்4கம்பராமாயணப் பதிப்புகள்
சிலவற்றில் காணப்படுகின்றன. இரகுவம்சத்தைக் கற்ற அறிஞர்கள்நரையின்
தோற்றத்தை வருணிக்கும்  இப்பாடல்களைக் கம்பன் கருத்திற்கு இயைய
இயற்றிச் சேர்த்திருக்கலாம்என அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிப்புக்
குழுவும்,  உ.வே. சாமிநாதையர் நூல்நிலையப் பதிப்பும்சுட்டுகின்றன.5
கி.பி. 1840இல் வேங்கடாசல முதலியார் அவர்களால் பதிப்பிக்கப்பெற்றகம்ப
ராமா


3.   Anjani Nanadan Sharan, (ed). ???????
     ?????? (Gorakhpur: Geetha Press, 4th edn, 1967), p.27.

4.1   மன்னனே அவனியை மகனுக்கு ஈந்துநீ
     பன்னரும் தவம்புரி பருவம் ஈதென
     கன்னமூ லத்தினில் கழற வந்தென
     மின்எனக் கருமைபோய் வெளுத்தது ஓர்மயிர்.

4.2.  தீங்கு இழை இராவணன் செய்த தீமைதான்
     ஆங்கு ஒரு நரையதாய் அணுகிற்று ஆம் என
     பாங்கில்வந் திடுநரை படிமக் கண்ணடி
     ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்.