யணத்தில் இப்பாடல்கள் இடம்பெறவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி இவற்றை இடைச்செருகல்கள் என்று மேற்குறிப்பிட்ட பதிப்புகள் கூறுகின்றன. கம்பன் கழகப் பதிப்பும் இவற்றை மிகைப் பாடல்களாகக் காட்டுகிறது. ஆனால், வை. மு.கோ. பதிப்பு எந்தக் குறிப்பும் இன்றி இவற்றை நூலுள்ளேயே வைத்துப் பதிப்பித்துள்ளது. நரை முடியால் முதுமையுணர்த்தும் மூன்று கவிஞர்களின் (கம்பனின் பாடல்களாக மேற்குறிப்பிட்டஇரண்டையும் ஏற்றுக் கொண்டால்) கூற்றைச் சற்று ஆழ்ந்து நோக்கலாம். மூவரும் நரை முடி தோன்றிற்று என்று வாளா கூறாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கற்பனைக் கூற்றை இணைத்துத் தற்குறிப்பேற்றமாகப்பாடுகின்றனர். தசரதனை வந்தடைந்த முதுமை அவனுக்கு ஒரு செய்தி கூற விரும்பியது. ஆனால், அச்செய்தி கைகேயிக்குஎட்டிவிடுமோ என்று அஞ்சியது. எனவே, நரைமுடியாக உருவெடுத்து அவன் காதோரமாகச் சென்று, ‘அரசே இராமனுக்கு அரசாட்சியைக் கொடுத்துவிடு’ என்று மிக ரகசியமாகக் கூறிற்று என்பது காளிதாசனின்கற்பனை. ‘அரசனே, அரசாட்சியை உன் மகனுக்குக் கொடுத்துவிட்டு நீ தவம் செய்வதற்குரிய பருவம் உன்னைவந்தடைந்து உள்ளது’ என்பதை அறிவுறுத்துவது போல் கன்னமூலத்தில் ஒரு நரைமயிர் தோன்றியது என்றும், இராவணன் செய்த தீமைகளெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு நரைமுடியாக உருவெடுத்தது போன்று காதருகே தோன்றியநரைமயிர் ஒன்றினை அரசன் கண்ணாடி வழியாகக் கண்டான் என்றும் கம்பன் கூறுகிறான். முதுமை அரசனுக்கு ஒரு உபதேசம் செய்யக் கருதியது. எனவே, அவன் காதருகே ஒரு வெள்ளை முடியாகத்தோன்றி, ‘அரசே, விரைவில் இராமனுக்கு முடிசூட்டி இப்பிறவியின் பயனை அடைவாயாக’ என்று அறிவுறுத்தியதாகத்துளசிதாசர் கூறுகிறார். இம்மூன்றனுள், காளிதாசனின் கற்பனை அரசியல் பாங்கு உடையதாகக் காணப்படுகிறது. அரசன்விழைவுக்குக் கைகேயி 5. (a) கம்பர் இயற்றிய இராமாயணம்: அயோத்தியா காண்டம் (முதற் பகுதி) அண்ணாமலைநகர்:அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1959, ப.7. (b) ஸ்ரீமத் கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம் (முதற்பகுதி), சென்னை: டாக்டர் உ.வே. சா. நூல்நிலையம், 1972, ப. 4 |