இடையூறு செய்யலாம் என்னும் ஐயக்குறிப்பு ‘ஷங்கையே’ என்னும் கவிஞனின் சொல்லாட்சியால் வெளிப்படுகிறது. இக்குறிப்பினுள் குறிப்பாக மற்றொரு செய்தியும் புலப்படுகிறது. அதாவது, இராமன் முடிசூடுவதைக் கைகேயி தடுக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் கவிஞன் மிக நுட்பமாக உணர்த்துகிறான். கம்பன் பாடல்களில் ஒன்று அவதார நோக்கம் உடையதாகக் காணப்படுகிறது. இராவணனின்தீமைதான் தசரதனின் முடிவுக்குக் காரணமாயிற்று என்று கவிஞன் தற்குறிப்பேற்றமாகக் கூறுகிறான். இராமனுக்கு எதிர்ப்பு வருமிடத் தெல்லாம் இராவணனைத் தொடர்புபடுத்திக் கூறுவதைக் கம்பன்ஓர் உத்தியாகவே பயன்படுத்துகிறான். தாடகையை இராவணனின் பாட்டியாகக் குறிப்பிடுவதும்(VI.13.32) தாடகை வீழ்ச்சிக்கு இராவணன் கொடி வீழ்வதை உவமையாக்குவதும் (I. 7.52) இங்கே கருதத்தக்கன. இங்கும் இராமன் முடிசூடுவது தடைப்படும் என்ற குறிப்பு தொனிப்பதை உணரலாம். எனினும், யாரால் தடைப்படும் என்பதிலோ, அத்தடை அறத்திற்குட்பட்டதா என்பதிலோ கம்பனுக்குக்கருத்தில்லை. எனவேதான், இராவணனின் வீழ்ச்சியை நோக்கிய இப்பாடல் அவதார நோக்கம்கொண்டது என்று துணிய வேண்டியுள்ளது. மகனுக்கு அரசை யளித்துவிட்டுத் தவம் செய்வதற்குரிய பருவம் வந்தும் அங்ஙனம் செய்யாதிருக்கும்தசரதனைக் கழறுவதற்காக (இடித்துரைப்பதற்காக) வந்ததுபோல் அவனுடைய காதருகே ஒரு நரைமயிர் தோன்றியதுஎன்னும் கருத்துடைய கம்பனின் மற்றொரு பாடல் சமய நோக்கம் உடையது. அதாவது, உறுதிப் பொருள்நான்கனுள் முன்னைய மூன்றும் துய்த்து நின்ற அரசன் பிறப்பறுக்கும் வீடுபேறு பெறுவதை வற்புறுத்துவதாகஇப்பாடல் அமைந்துள்ளது. இராமனுக்குப் பட்டம் கட்டிவிட்டுப் பிறவியின் பயனை அடைவாயாக என்று நரைமயிர் உபதேசம்செய்வதாகத் துளசிதாசர் கூறுகிறார். இராமனுக்கு முடிசூட்டுவதனால் தசரதன் எப்படிப் பிறவிப் பயன்அடைவான் என்று கூறவதால், பிரபன்ன பக்தியை நோக்கியதாக இதனைக் கருதலாம். மேலே காட்டிய மூன்று கவிஞர்களும் தத்தம் காலத்துச் சமுதாய, உலகியற் பார்வைக்கேற்பத்தசரதனின் முதுமையைக் குறிக்கும் நரைமயிர் தோற்றத்திற்குக் காரணம் கற்பித்துள்ளனர் |