எனக் கருத வேண்டியுள்ளது. அவதாரக் கருத்துகள் இலக்கியப் படுத்தப்பெறாத காலத்துக்குரியகவிஞன் காளிதாசன் (கி.பி. 4 ஆம் நூற்றாண்டு); எனவே ஒரு வரலாற்று அரசியல் பார்வையோடுகாளிதாசனின் கவி செல்கிறது. ஆழ்வார்களுக்குப் பின் வந்த கம்பன், தன் காப்பியத்திற்கு இராமாவதாரம் என்றே பெயர் சூட்டிய கம்பன், அவதார நோக்கத்தில் இதனை விளக்குகிறான். பரம்பொருளைஅனுபவிப்பதையே நோக்கமாகக் கொண்ட பக்தி இயக்கம் பின்னர்த் தத்துவ ஆசாரியர்களின் இயக்கமாகச் செறிவடைந்து இறுதியில் பஜனை இயக்கமாக நீர்த்துவிட்ட காலத்தே தோன்றியவர் துளசிதாசர். எனவே, அவர் கருத்து வரலாற்றையோ, அரசியலையோ,அவதாரத்தையோ, தத்துவத்தையோ குறியாகக் கொள்ளாமல், பிரபன்ன பக்தியின் பிரதிபலிப்பாகஅமைந்திருக்கக் காண்கிறோம். கனவும் கிரகநிலையும் தான் கண்ட கனவின் உற்பாதங்களுக்கு அஞ்சியும், தன்னுடைய சாதகத்தில் கிரகநிலைகள்தனக்கு இறுதிபயக்கும் நிலையில் அமைந்துள்ளன என்று கவன்றும் தசரதன் இராமனுக்கு விரைவில் முடிசூட்டவிரும்பினான் என்று ஆதி காப்பியமாகிய வான்மீகம் கூறுகிறது. கிரகநிலை பற்றிக் கூறும் சுலோகங்கள்வான்மீகி ராமாயணத்தின் இருவகை (வடபுல, தென்புல) வழக்குகளிலும் காணப்படுகின்றன. இராம காதையைப் பாடும் பிற இராமாயண நூல்களில் இக்கருத்து காணப்பெறவில்லை. துறவு நோக்கம் வீடுபேறு விரும்பித் துறவு மேற்கொள்ள வேண்டும் என்னும் ஏதீட்டின் காரணமாகத் தசரதன்அரசு துறக்க விரும்பினான் என்னும் கருத்தை வான்மீகம் கூறவில்லை. கம்பராமாயணம் அத்யாத்மராமாயணம் ஆகிய இருநூல்கள் மட்டும் இக்கருத்தைக் கூறுகின்றன. இவற்றுள்ளும் கம்ப ராமாயணமேஇக்கருத்தை மிக விரிவாகப் பல பாடல்களில் பேசுகிறது. வசிட்டன் முதலான அவையினரோடு பேசுமிடத்தும், இராமனிடத்துத் தன் முடிவைக் கூறுமிடத்தும் தசரதன் தன் துறவு விருப்பத்தைத் தெளிவாகவே கூறுகிறான். அத்யாத்ம ராமாயணம் சுருக்கமாக, "ஆத்மார்த்தமான புண்ணிய கருமங்களைச் செய்ய விரும்புகிறேன்" என்று மட்டும் கூறுகிறது. வனம் சென்று தவம் செய்ய வேண்டும் என்னும் குறிப்பும் இதில் காணப்பெறவில்லை. கம்பன் படைத்த தயரதன் இவ்விருப்பத்தைப், |