59

    பேதைமைத் தாய்வரும் பிறப்பை நீக்குறு
    மாதவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன்

என்று தெளிவாகக் கூறுகிறான்.

     பிரம்மச்சரியம் முதலான நால்வகை நிலைகளைக் குறித்த
கருத்துகளுக்குத் தாயகமான வடபுலத்தே தோன்றிய இராமாயண நூல்கள்
இக்கருத்தை வெளியிடவில்லை என்பதுசிந்தித்தற்குரியது.  தென்னாட்டுச்
செல்வாக்கால் வைணவ பரமான நூல்களுடன் கம்ப ராமாயணமும்வடக்கே
பரவியிருந்த காரணத்தால் அத்யாத்ம ராமாயணம் இதனைக் குறிப்பாகவேனும்
கூறுகிறது என்றுகொள்ளலாம்.  இராமாநுசரின் செல்வாக்கை அத்யாத்ம
ராமாயணம் முழுவதிலும் காணலாம் என்னும் அம்பாபிரசாத்அவர்களின்
கூற்றும் இதனை வலியுறுத்தக் காண்கிறோம்.6

     இனிக் கம்பனைப் பொறுத்தவரை,

     காமஞ் சான்ற கடைக்கோட் காலை...
    அறம்புரி சுற்றமோடு கிழவனும் கிழத்தியும்
    சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.
   (தொல். பொருள். 190)

என்னும் இலக்கண வரம்பும்,  வள்ளுவரின் துறவற இயலும்,  சிலப்பதிகாரத்
தாபதர்  பள்ளியும்,சிந்தாமணியின் த்தி இலம்பகமும்  இக் கருத்துக்கு
வழிகாட்டிகளாய் அமைந்திருக்கலாம் என்றுகருதத் தோன்றுகிறது.

1.2.  தசரதன் முடிவும் அரசவை ஏற்பும்
 
வான்மீகம்

     தசரதனின் முடிவைக் கேட்ட வசிட்டன் முதலான முனிவர்களும், 
அரசவையோரும், நகர பிரதானிகளும்,பிற அரசர்களும்
பெருமகிழ்ச்சியுற்றனர். இராமனின் பண்பு நலன்களைப் பலபடப் பாராட்டி
விரைவில்இராமனுக்கு முடிசூட்டி மகிழ்விக்குமாறு வேண்டுகின்றனர்
(II.2.26 - 55).

கம்ப ராமாயணம்

     வசிட்டன் உள்ளிட்ட அவையோரும்,  வேத்தரசர்களும்,  தசரதன்
முடிவை அறிந்து பேருவகைகொள்கின்றனர். தசரதன்


6.   துளசி காவ்யம் - ஜின்தன், பிரதி 112