60

துறக்கும் என்பதாலும் இராமன் முடிசூட்டப் பெறுவான் என்பதாலும் இரு
கன்றினுக்கு இரங்கும் ஓர்ஆவென இருந்தனர். மேலும் இராமன்
அரசனாவதால் தாம் பெறும் மகிழ்ச்சியைப் பலவாறு புலப்படுத்தினர்.

ரங்கநாத ராமாயணம்

     அரசவை தசரதன் முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்று,  "இராமன்
மூவுலகையும் ஆளும் அருந்திறல்படைத்தோன்;  இந்தப் பூவுலகை ஆள்வது
அவனுக்கு ஒரு விளையாட்டே"  என்று கூறி வணங்கியது.

பாஸ்கர ராமாயணம்

     இராமன் முடி சூடுவான் என்ற தசரதனின் அறிவிப்பால்
மகிழ்ச்சியடைந்த அவையோர்,  தசரதன்அரசு துறப்பதைவிட இராமன்
இளவரசனாகவும்,  தசரதனே மன்னனாகவும் நீடிப்பதே தங்களுக்குப்
பேருவகைதருவது என்றனர்.  அப்போது தசரதன்,  "நான் உங்கள்
கருத்தறியவே இவ்வாறு கேட்டேன்;  அரசாளும்திறம் இன்னும் எனக்கு
உண்டு" என்று அவர்களைத் தேற்றுகிறான்.

மொல்ல ராமாயணம்

     ஆதுகூரி மொல்ல தன் காப்பியத்தில் அரசவைக் காட்சியையே
அமைக்கவில்லை.  தசரதன் தன்முடிவை வசிட்டனுக்குக் கூறுகிறான். 
வசிட்டன் அதற்கேற்ப முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்கிறான்.

தொரவெ ராமாயணம்

     குமார வான்மீகியின் காப்பியத்தில் வசிட்டன் முதலான அரசவைப்
பெருமக்கள் தசரதன் முடிவைப்புகழ்ந்து வரவேற்கின்றனர்.  மலையாள
மொழி இராமாயணங்களாகிய கன்னச ராமாயணமும் எழுத்தச்சனின்அத்யாத்ம
ராமாயணமும் அரசவை ஆலோசனைக் காட்சியைப் படைத்துக் காட்டவில்லை.

தொகுப்புரை

     அரசவை ஆலோசனையைப் படைத்துக் காட்டியுள்ள இராமாயணங்கள்
எல்லாம் தசரதன் முடிவை அவையோர்போற்றிப் புகழ்ந்து வரவேற்பதாகக்
காட்டுகின்றனர்.  இதில் வேறுபாடு காணப்பெறவில்லை.