61

     தெலுகு பாஸ்கர ராமாயணம் மட்டும் ஒரு சிறு மாறுதலைக்
குறிப்பிடுகிறது.  அதாவது,  தசரதன் அரசாட்சியில் இருந்து முற்றிலும்
விலகாமல் இராமனை இளவரசனாக்கித் தானும் உடனிருந்து ஆளவேண்டும்
என மக்கள் விரும்புவதாகக் காட்டுகிறது.  கம்பன் முதலான கவிஞர்கள், 
தசரதன் அரசு துறத்தலுக்காக அவையோர் வருந்தினாலும், இராமன்
அரசனாகின்றான் என்னும் பெரு மகிழ்ச்சியால் அவ்வருத்தத்தை
மறக்கின்றனர் என்று படைத்துக் காட்டுகின்றனர்.

      இவ்வேறுபாட்டுக்குக் காரணம், வான்மீகத்தில் இராமனுக்கு இளவரசுப்
பட்டம் கட்டுவதாகத்தான் தசரதன் முடிவெடுக்கிறான் (II. 2.12, 54; 3.2, 4;
4.22).  துளசி ராமாயணமும் இதே கருத்தைக் கூறுகிறது. (II. 2.8; 4.2; 5.3)

     ஆனால்,  கம்ப ராமாயணம்,  அத்யாத்ம ராமாயணம் முதலான
காப்பியங்கள் தசரதன் இராமனை அரசனாக்க முடிவு செய்வதாகக்
காட்டுகின்றன.  முதுமையைக் காட்டி ஓய்வு வேண்டித் தசரதன் இராமனுக்கு
முடிசூட்டக் கருதுவதால் அரசன்,  இளவரசன் என்னும் பட்டங்களில் அதிகார
வேறுபாடு இல்லை எனக் கருதிக் கம்பன் முதலான கவிஞர்கள் இராமனை
அரசனாக்க முடிவு செய்வதாகக் குறிக்கின்றன போலும்.

1.2.1. வேற்றரசர்களுக்கு அழைப்பு

வான்மீகம்

     அருகிலுள்ள அரசர்களையும் தலைமையானவர்களையும் அழைத்து
வருமாறு அரசன் ஆணையிட்டான்.  கால தாமதம் ஆகுமென்று கருதிக்
கேகய நாட்டரசரையும் சனக மன்னரையும் அழைத்து வரச் சொல்லவில்லை.
விழா நிறைவேறிய பின்னர் அவ்விருவரும் நல்ல செய்தியைக் கேள்விப்பட்டு
மகிழ்ச்சியடைவார்கள் என்றான். (II. 1.47)

     பரதன் நம் நகரிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறான்.   சாஸ்திர 
விதிகளுக்கேற்ற முகூர்த்த தினமாய் இதுதான் (நாளை)   இருக்கிறது.  இந்த
ஒரு காரணத்துக்காகவே இப்போதே உன் பட்டாபிஷேகத்தைச் செய்ய நான்
அனுமதிக்கிறேன்.  (II.  4.25)

     நான் ஐயமறத் தெளிந்த வேறொரு செய்தியும் உண்டு.  உனது
தம்பியாகிய பரதன் சான்றோர்களின் விதிமுறைகளில் அசையாத
பக்தியுடையவன்.  மூத்தோர் மனம் கோணாமல் நடப்பவன்.  புலன்களை
வென்றவன்; தர்ம சிந்தையுடையவன்.  இராமனே,  இத்தகைய